16 டிச., 2024

ஆவுடையார்கோவில்

ஆவுடையார் கோவில் (திருப்பெருந்துறை) அடங்களுக்குப் பிறத்தியான சிவன் கோவில். நரியை பரியாக்கிய (குதிரை) மாணிக்கவாசகாரர் எழுப்பப்பட்ட கோவில். அரிமத்தின பாண்டியனிடம் தளபதியாக பணியாற்றிய மாணிக்கவாசகர் சிவன் மேல் கொண்ட மையத்தால் குதிரைகளை விட்டு கோவில் கட்டினார மூலவர் கிழக்கு பார்த்ததாக இருக்கும் சிறிய கோவில். சுவரின் உட் பிரகாரத்தில் ஓவியங்கள் சைவர்கள் சமணர்களை கழுவில் ஏற்றிய ஓவியம். (சைவர்கள் ரொம்ப சாதுவானவர்கள் என நம்புவோமாக) பிரகாரத்தின் நுழைவாயில் 27 நட்சத்திரங்கள் பொறித்த கற்சிற்பம். எதிரில் ஒன்பது கோள்கள் மனித உருவில் பொறிப்புகளாக. முதல் பிரகாரம் இரண்டாம் பிரகாரம் தியாகராஜ ஆராதனை மண்டபம். குளம் என ஏகத்துக்கும் தடபுடல் தான். மூலவரை(காவி சுற்றுப் புற சுவர்) காட்டிலும் உற்சவரைத்தான மக்கள் வழிபாடுவதும், ஆறு கால பூஜையும். 
திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிக்காத புதிய நுட்பங்களை கொண்ட சிற்ப வேலைப்பாடுகள். கொடிமரம் பலிபீடம் கிடையாது. திருவாடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட சரஸ்வதி நூலகம் ஒன்று உள்ளது. நூழைவாயில் வேலைப்பாடு சிற்பங்கள் அதிகம். ஒரு நாள் வேண்டும் பார்க்க) மார்கழி மாதம் தேர் மற்றும் திருவிழா. இது சிறிய அறிமுகமே. (சுவாரஸ்யமான வாய்மொழி உருட்டு வரலாறும் உண்டு) நேரடி நுகர்வின் இன்னும் ஏராளம் தாராளம் கொட்டி கிடக்கும்... நன்றி.

கருத்துகள் இல்லை: