AIPSO - அமெரிக்காவின் பாசிசத்திற்கு எதிராக உரிமை முழக்கம்
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் (AIPSO) All India Peace and Solidarity Organisation உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து சட்டபூர்வமற்ற முறையில் குடியேறியவர்களை கை கால் விளங்கிட்டு வெளியேற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களின் போக்கை கண்டித்தும் அதற்கு மௌனமாக இருக்கும் இந்திய அரசின் மோடியின் மௌனத்தை கலைக்க வேண்டிய அநீதிக்கு எதிரக உரிமை முழக்கப் போராட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது.
மேற்கண்ட நிகழ்வில் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் பாலச்சந்திரன் (நான் )தலைமை ஏற்க, இந்திய தேசிய மாதர் சம்மேலனம் NFIW தேசிய செயலாளர் மருத்துவர் தோழர் ஏ ஆர் சாந்தி அவர்கள் தொடங்கி வைத்திட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் - விடுதலை அமைப்பின் பொறுப்பாளர் ரங்கசாமி, கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் தோழர் கசி. விடுதலைக் குமரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் அன்பு மணவாளன் கண்டன உரையாக மாநில செயலாளர் மருத்துவர் தோழர் ஜி.ஆர். ரவீந்திரநாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக ஐக்கிய புதுமை கட்சியின் பொறுப்பாளர் கலையரசன் அவர்கள் நன்றி கூறினார்கள். 35க்கும் குறையாக தோழர்கள் உரிமை முழக்கம் செய்தனர். திருப்திகரமான நிகழ்வு ஒன்ற மணி நேரம் தொய்வு இல்லாமல் செறியுடன் நடைபெற்றது.
கருத்துகள்