கம்யூனிஸ்ட் எதிர்காலம் குறித்து...
சில எதிர் முகாம் நண்பர்கள் நோட்டோவுக்கு கீழே பிரதான இடதுசாரிகளின் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து உள்ளது குறித்து சிலாகிக்கிறார்கள். ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் கம்யூனிஸ்ட் கட்சி சூழலுக்கு தகுந்தது போல் தன்னை தகவமைத்துக் கொள்ளும் அறிவியல் வகைப்பட்ட இயங்கியல் போக்கு கொண்டது. தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு புதுப்பித்துக் கொள்ளும். ஆகவே நண்பர்களே உங்களின் கவலை கவனத்தில் கொள்ளப்படும் ஆனால் எள்ளி நகையாடுதல் எதார்த்தத்தை கடந்தாக.
மேலும் காங்கிரஸ் 20 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது. அதனால், அதன் வாழ்வு காலம் முடிந்து விட்டது என்று புரிந்து கொள்வது பொருளற்றது என்பது போலவே கம்யூனிஸ்டுகளின் வாக்கு வங்கி சரிவு அவர்களை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்பதும்.
மேலும் இன்றைய காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்பாடுகளான, சமூக நீதி, அரசியல் சாசன பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பெரும்பான்மை மக்களின் பொருளாதார ஆற்றலைப் பாதுகாக்க எத்தனிக்கிறது. ஒருவகையில் கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறை காங்கிரஸ் கைக்ககொள்ள எத்தனிக்கிருக்கிறது. அதிகாரத்துக்கு வந்தால் காங்கிரஸ் அதை செய்யாது என்பது வேறு. ஆனால், மக்களுக்கு ஆகப்பெரிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தன்னை தயார்படுத்துகிறது. மக்களும் வாக்குகளை சிதற விடாது எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தின் பொருட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்கு வங்கி சரிவு, இயல்பான ஒன்றுதான்.
கடந்த காலங்களில் மேற்குவங்க தேர்தலில் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்களுக்கு வாக்களித்தவர்கள் பிஜேபிக்கு எதிராக திருணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்க திரும்பிய காரணம் அதுவே. பல மாநிலங்களில் இரு துருவை எதிர்ப்பு அரசியலால் பல கட்சிகள் வாக்குவங்கு சரிவும், இரு துருவ அரசியலின் ஏதோ ஒரு பக்கத்தில் இணைந்து கரைந்து போவதை காண்கிறோம்.
தமிழகத்தில் கூட பாஜக தோல்விக்கு அதுவே காரணம். திமுகவை பலருக்கு பிடிக்கவில்லை தான். என்ன செய்வது பாஜக எதிர்க்க வேண்டுமே...
அப்படியான முடிவுகள் இனி வட மாநிலங்களில் ஏற்படும். பின் தங்கிய மக்கள் அரசியல் முதிர்ச்சி பெறுதல் இப்போது இந்தி பேசும் மாநிலங்களில் நடக்கிறது. படிநிலைப் பண்பு கொண்ட இந்திய மக்கள் ஜனநாயக உளவியலுக்கு தயாராக குறிப்பிட்ட கால அவகாசம் தேவையாக இருக்கிறது. இது நாள் வரை திரை மறைவாக இருந்த சனாதன கோட்பாட்டு வேசம் இனி கதை புது ஆவது என காங்கிரஸ் கழட்டி எரிகிறது. காங்கிரஸ் இப்போது அரசியல் சாசனம் பாதுங என்கின்ற வேடத்தை அணிய தொடங்கி இருக்கிறது. இதனால் பாஜக துவக்கத்தில் வெற்றி அடையும் போகப்போக காங்கிரசின் அரசியல் உணர்வு மெருகடையும்.
என் அளவில் இந்தி பேசும் மாநிலங்களில் இப்போதுதான் அரசியல் கூர்மை அடைகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின சூழலுக்கு தகுந்தவாறு தன்னை தகமைத்துக் கொள்ளும் அறிவியல் பாங்கு கொண்டது. மிகப்பெரிய வலை பின்னல் அமைப்பும் உள்கட்சி ஜனநாயகத்தை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் அவ்வளவு எளிதாக அற்றுப்போகும் சங்கதி அல்ல. நோட்டாவோட போட்டி போட்டுவது வேறு, பொது சமூகத்தில் அரசியல் உரிமைகளை எளிய மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது வேறு. கம்யூனிஸ்டுகளின் போராட்ட காளம் அற்றுப்போக இரண்டு காரணிகள் முன் நிபந்தனை
1 மொத்த சமூகமும் சோசலிசத்தை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டும். அல்லது
2. முழு முற்றாக ஒரு சர்வாதிகார அரசு அவர்களை அழித்து ஒழிக்க வேண்டும்.
இரண்டாவது காரணத்திற்கு இந்தியாவில் சாத்தியமில்லை என்பது எனது எண்ணம். படிநிலைப் பண்பாடும், பாகுபாடு உளவியல் நிறைந்த, ஜனநாயகத்தை மறுக்கும் பாங்கை கொண்ட இந்திய சமூகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆன்மா தேவை அதிகரிக்குமே ஒழிய குறைய வாய்ப்புகள் இல்லை. காரணம் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு உறுப்பு அமைப்புகள் இருக்கின்றன அவைகள் தொழிற்சாலைக்கு வெளியே அவர்களின் உரிமையை பெற்றுக் கொடுப்பது மாணவர் இளைஞர்களுக்கு மற்றும் பெண்களுக்கு உரிமைகளுக்காக குரல் கொடுப்பது போராட்டம் செய்வது அதிகபட்ச சட்டபூர்வமான ஆதரவை உத்தரவாதப்படுத்துவது அதோடு அல்லாமல் கலை இலக்கிய செயல்பாடுகளில் உயிர்ப்போடு இருப்பது என பழங்குடியினர் விளிம்பு நிலை மக்கள் வேளாண் சமுகத்திற்கு, பல்வேறு உள்ளூர் அதிகாரங்களுக்கு எதிராக குரல் அற்றவர்களுக்கு எப்போதும் குரல் கொடுக்கும் அமைப்பாக கம்யூனிஸ்டுகள் இருப்பதால் அவ்வளவு எளிதாக அவர்கள் இடத்தை வேறு யாரேனும் நிரப்ப முடியாத காரணத்தினால் அது என்றும் உயிர் வாழும். ஒருவேளை இன்றைய கட்சிகளை தடை செய்தால் கூட வேறொரு பெயரில் அவர்கள் தொடர்ந்து இயங்குவார்கள் எனவே கம்யூனிஸ்டுகள் இந்திய சமூக மாற்றத்திற்கு அடிப்படையான ஆன்மா.
கம்யூனிஸ்டுகளுக்கு தடை அமெரிக்காவில் சாத்தியப்படலாம் இந்தியாவில் சாத்தியமில்லை.
(வேகவேகமாக சட்டங்களை இயற்றும் அமெரிக்கா, வேகவேகமாகவே அவைகளை திரும்ப பெறவோ அல்லது மௌனமாக இருக்கும் காலம் காத்திருக்கு...
இணையத்தில் உலா வரும் கம்யூனிஸ்டுகள் இனி அமெரிக்காவில் குடியேற கூடாது என்ற தகவல், இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு பொருந்தாது. பாராளுமன்ற ஜனநாயகத்தை அங்கீகரிக்கும் கட்சிகளுக்கு அமெரிக்கா தடை விதிக்கவில்லை. இடதுசாரி கட்சிகள் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதாலேயே பதிவு பெற்ற தேர்தலில் போட்டி போடும் கட்சியாக இருக்கிறது. இந்த மாதிரி இடது சாரி கட்சிகளை அமெரிக்க தடை செய்வதில்லை. சர்வாதிகாரத்தை மட்டுமே தடை செய்கிறது. தவறான பதிவுகளின் மூலம் புரிதலும் தவறாகவே இருக்கும். மேலும் இது 2020 இல் வந்த சட்டம்.)
கம்யூனிஸ்டுகளை வாக்கு வங்கி அரசியலோடு சுருக்கி பார்க்கும் போக்கு எதிர்ப்பவர்களுக்கு வேணால் உதவலாம். ஆனால் களத்தில் சமூகத்தை ஜனநாயக ரீதியாக சமைப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
அப்புறம் நண்பர்களே...
நான் மட்டும் முட்டுக்கொடுத்து கம்யூனிஸ்ட் கட்சி நிமுத்த முடியாது. எனது புரிதல் மட்டுமே இது.
பாலச்சந்திரன்.சி
கருத்துகள்