இந்திய பண்பாடு குடும்ப என்ற அலகு மட்டுமே பாதுகாப்பான கேந்திரம்.
அரசு வழங்கும் பிற உதவிகள் துணை காரணிகளாக மட்டுமே இருக்கிறது குடும்பம் தான் ஒருவரை முழு முற்றாக பாதுகாக்கும் அலகாக இருக்கிறது. இந்திய சமூகத்தில் குடும்பம் சார்ந்த உடமை பண்பாடு ஒருவரை பாதுகாக்கும். குடும்பமற்ற வேற எந்த சமூக அமைப்பும் பாதுகாக்காது. இருக்க இடம், உணவு, கல்வி, ஆசாபாசங்கள், உடமைகள் என அனைத்தும் குடும்பம் சார்ந்ததாக இருக்கிறது. ஆக எல்லா மனிதர்களும் குடும்பம் என்ற பாதுகாப்பான அரனுக்குள்ளே வாழப் பழக்கப்பட்டு விட்டோம்.
ஆனால் சமூகச் சார்ந்த பொது விதிகளின் கடைப்பிடித்தலே எல்லோரும் ஒருங்கிணைக்கும் சாலையாக இருக்கிறது. இப்படியாக குடும்ப அலகுகளின் அறிவு வளர்ச்சிக்கு சமூகத்தின் பொது புத்தியில் பங்களிப்பு அவசியம். பெரு சமூகத் திரளில் சில குறிப்பிட்ட நபர்களின் பங்களிப்பு அவசியமாகிறது. இவர்கள் தங்களை சமூகத்திற்காக முழு முற்றாக அர்ப்பணிப்பார்கள். அவர்கள் வழி தான் இந்த உலகம் செழுமையுகிறது. புது கண்டுபிடிப்புகள், தத்துவங்கள், கோட்பாடுகள் என எல்லோருக்குமான சமூகமாக வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறது. தொடர்ந்து சமூகம் மேன்மையுறுவதற்கு காரணியாக அமைகிறது.
நாம் பயன்படுத்தும் அநேக முன்னேறிய தத்துவங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களாக இன்று உருமாறி எல்லோரும் பயன்படுத்துகிறோம். சமூகத்தின் உடமை வர்க்கம் அதை நுகர் மட்டும் செய்யும். ஆனால் உழைப்பாளிகள் தான் சமூகத்தின் வளர்ச்சியின் வரலாற்றை உருவாக்கியவர்கள். கற்காலம் தொட்டு இன்று வரையிலுன செயற்கை நுண்ணறிவு வரையிலும் இப்படியான கண்டுபிடிப்புகளாக பரிணாமம் அடைந்திருக்கிறது.
அதற்கு அடிப்படை காரணம் குடும்பத்தை தாண்டி சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்கின்ற அறவுணர்வும் மனித பண்புமே காரணம்.
குடும்பத்துக்காக உழைக்கின்ற போது அவை பாதுகாப்பாக எல்லோருக்கும் பயன்படுகிறது உடமை ஆகிறது. ஆனால் சமூகத்திற்காக பங்களிக்கும் போது மிக சொற்ப அளவு விளைவுகளை எதிர்பார்க்க முடியும். குடும்பத்துக்காக உழைக்கும் போது புகழ், அந்தஸ்து, கௌரவம், மற்றும் எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பு உத்தரவாதம் என அனைத்தையும் அடையலாம்.
சமூகத்திற்காக அர்ப்பணிப்போடு பங்களிப்பு செய்யும் போது சொற்ப விளைவுகளே அதன் ஊடாக பல்வேறு அக புற முரண்பாடுகளின் மூலம் சுணக்கமே ஏற்படும். அந்த வகையில் பொதுவுடமை கட்சியில் ஒருவர் பயணிக்கும் போது சமூக விழுமியங்களை பின்பற்றவும் கடைபிடிக்கவும் வேண்டி இருக்கும். அதன் பொருட்டு குடும்பத் தலைவரின் பங்களிப்பு சமூகம் சார்ந்ததாக இருந்தால் பிறரோடு ஒப்பிடும் அளவிற்கு பொருளாதாரம் மிகவும் பின்தங்கியதாகவே இருக்கும். சரியாக சொல்லப்போனால் அவரால் அந்த குடும்பத்திற்கு பயனற்றதாக இருக்கும். பிற கட்சிகளில் பயனுள்ளதாக இருந்தாலும் பொதுவுடமை கட்சிகளில் அந்த சாத்தியம் மிக மிக குறைவு.
அப்படியாக பொது சமூகத்துக்கு தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவருக்கு நீண்ட நாள் நோய் ஏற்படுவது அதை குடும்பம் பராமரிப்பது என்பது மேலும் துயரம் தொய்ந்த நிகழ்வு. அப்படிதான் 1955 டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சிதம்பரத்தின் மகனாக பிறந்த சோமையா அவர்களின் மரணம் மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
இது அவருக்கானது மட்டுமல்ல சமூகத்தில் பலரும் இப்படி இருக்கிறார்கள். சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளாக மூன்று நாளுக்கு ஒரு முறை என சிறுநீரக சுத்திகரிப்பு இப்போ இரண்டு நாளுக்கு ஒரு முறை என மாறி மிகப்பெரிய செலவீனத்தையும் குடும்பத்திற்கு பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது. தோழரின் பொதுவுடமை கட்சியில் தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு அவருடைய பங்களிப்பு மகத்தானது. கெத்தான இளைஞனாக தனது வாழ்வை துவங்கிய தோழர் சோமையா அவர்கள் தனது மாமா அழகர்சாமியின் பொதுவுடமை கட்சியின் பங்களிப்பால் ஈர்க்கப்பட்டு தானும் தன் குடும்பத்தையும் கட்சியில் ஈடுபடுத்திக் கொண்டவர்.
பொதுவுடமைக் கட்சியில் முழு நேர ஊழியர்களுக்கான கௌரவ ஊதியத்தை கூட பெறாமல் தொடர்ந்து இங்கியவர். கட்சி ஒன்றிய செயலாளர், விவசாய சங்க மாவட்ட செயலாளர், மாநில குழு உறுப்பினர், ஐக்கிய விவசாய சங்க முன்னணி ஒருங்கிணைப்பாளர் என பல பணிகளில் பணியாற்றியவர்.
நிலமிச்சி போராட்டத்தில் கர்ப்பிணியான தன் மனைவியுடன் கலந்து கொண்டவர் சோமையா. தன்னுடைய குழந்தைகள் அனைத்தையும் மிகவும் துயரம் தோய்ந்த அக முரண்பாடுகள் நிறைந்த கம்யூனிஸ்ட் கட்சியிலையே இணைத்தவர். புதிய தோழர்கள் புதிய அறிமுகங்கள் கட்சியில் நிலவும் பின்தங்கிய மனோபாவத்தை துணிச்சலாக எதிர்க்க கூடியவர். அதன் பொருட்டு அவர் பல பின்னடைவைகளை சந்தித்தாலும் தொடர்ந்து உள் கட்சி போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர். என் அளவில் பின்தங்கிய இந்திய சமூகத்தில் முற்போக்கு கட்சிக்குள்ளும் பிற்போக்கு சக்திகளுடன் உள்கட்சி போராட்டம் மிக துயரமான நெருக்கடி. தனிமனித வெறுப்பு வெறுப்புகளால் மிகவும் மோசமாக நோகடிக்கப்படுவோம் அப்படி இருந்தும் அதில் பயணிப்பது அரசியல் உணர்வும் இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படி அற சார்ந்த அரசியல் உணர்வோடு பணியாற்றியவர் தோழர் சோமையா.
திரை மறைவாக இயங்கும் அவர் சார்ந்த சமூகக் கூட்டமைப்பில் பல முறை தண்டத் தொகை கட்டி உள்ளிருந்து கொண்டே சொந்த சமூகத்தின் ஜனநாயகப்படுத்தும் பண்பு கொண்டவர் தோழர் சோமையா. கம்யூனிஸ்ட் கட்சிகளில் அரசியல் உணர்வோடு கூடிய அர்ப்பணிப்பு முக்கியம். இவை இரண்டையும் ஒருங்கி பெற்ற ஒருவரால் தான் சமூகத்தை புரிந்து கொண்டு அர்ப்பணிப்புடன் உழைக்க முடியும். சமூகத்தின் பாதிப்புகளில் வலி அரசியல் ஆற்ற நிலையில் பலரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அல்லது சிறு சலுகைகளுக்காக இணைந்து பணியாற்றவும் செய்வார்கள்.
இப்படி உள் கட்சியில் தத்துவ போராட்டமும் அரசுக்கு எதிரான அரசியல் போராட்டமும் என இரண்டு பக்க செல்லத்தக்க நாணயமாக இயங்கியவர் சோமையா. கூடவே குடும்பத்தினுடைய பொருளாதார போராட்டமும் சேர்ந்து கொள்ள அதோடு போராடி பங்களிப்பு செய்தவர். அப்படிப்பட்ட ஒரு தோழர் நீண்ட நாள் நோவாய் படுவது அந்த குடும்பத்திற்கு பெரும் பாரமாக அமைந்து விடும் கொடுமை இருக்கிறதே தாள முடியாத துயரம். அப்படியாக தோழர் சோமையாவின் மரணம் இன்றைய தினத்தில் மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
தோழரின் பொதுவுடமை அரசியல் அற உணர்வு, பின்பற்றுதல் உரிய போர்க்கள பாதை அது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஊடே அறியப்படாத பல தோழர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இவ்வளவு தூரம் நம்மை நகர்த்தி வந்திருக்கிறது. சமூகத்தின் பல்வேறு மாற்றங்களை சட்டத்துக்கு உட்பட்டும் சட்டத்துக்கு அப்பாலும் பெருந்திரளான மக்களுக்கு உரிமைகளாக பெற்றுத் தந்திருக்கிறது. அறியாத ரத்த சுவடுகள் ஆயிரம் ஆயிரம் அவைகளைக் கொண்டாடும் வேலையில் தோழர் சோமையாவின் தியாகம் மதிப்புமிக்கது. சென்று வா தோழா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக