புதுக்கோட்டையில் கவிதை கூடல்...

  

புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - அம்பிகா கல்வி அறக்கட்டளை இவை இணைந்து கவிதை கூடல் நிகழ்வை மிகச் சிறப்பாக...
சற்றேற குறைய 40 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் பங்களிப்பும், குறிப்பாக இளம் பெண்கள் படைப்பாளராக பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியும், வரவேற்பு உரியதாக எல்லோரையும் மகிழச் செய்த நிகழ்ச்சியாக அமைந்தது.

உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கமும் அவர்களின் பதிப்புகமான
கவிஞர் குரல் பதிப்பகம் இணைந்து நடத்திய 
422-வது இளந்தென்றல் கவியரங்கம் 

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள முன்னாள் மாவட்ட ஆட்சியர் பெயரில் அமைந்த மனோகரன் சாலை, (யூனியன் ஆபீஸ் பின்புறம்) உள்ள அறிவியல் இயக்க அரங்கத்தில் காலை 11:00 மணிக்கு துவங்கிய இந்நிகழ்வு அம்பிகா அறக்கட்டளை நிறுவனர் தலைவர் சந்திர ரவீந்திரன் அவர்களின் சிறிய முயற்சியிலும், முன்னெடுப்பினாலும் அவர்களின் தலைமையிலையே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வரவேற்புரையும் ஒருங்கிணைப்பையும் தொகுப்புரையும் சிறப்புர செய்தால் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட பொருளாளர் கவிமதி சோலச்சி அவரின் சீரியப் பணியில் சிறப்பாக அமைந்தன.
 
இன்றைய நிகழ்வின் கவியரங்க தலைப்பு
'"அன்பை அறுவடை செய்" தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. முன்னிலையாக புதுக்கோட்டை கலை இலக்கிய சங்கத்தின் மாவட்ட தலைவர் கவிஞர்.வீ.க.பொன்னையா தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் தோழர் பாலச்சந்திரன் கவிஞர் குரல் பொறுப்பாளர் கவிஞர் புதுகை புதல்வன் ஆகியோருடன் இனிதே துவங்கியது. 

இந்த நிகழ்வின் வாழ்த்துரை 
உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கத்தின் தலைவர் 
கவிஞர். க.ச.கலையரசன் அவர்கள் 12000 கவிதைகள் இடம்பெறும் தொகுப்பை ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் அவரின் விளக்க உரையும், தமிழ் மொழி மீதான அர்ப்பணிப்பும் சிறப்புமிக்க ஒன்றாக இருந்தது

சிறப்பு அழைப்பாளராக கவிக்களஞ்சியம் உலக சாதனை நூல் விளக்கத்தை கவிஞர். எடையூர் நாகராசன் அறிமுகம் செய்து வைத்தார்
உலகத் தமிழ் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கத்தின் கொள்கைப்பரப்பு இணைச் செயலாளர். முனைவர். இரா.தங்கமணி தமிழ் கவிதை, தமிழின் இன்றைய சூழல் குறித்தும் சிறப்புரையாற்றினார். 
அன்பை அறுவடை செய் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் 30க்கும் மேற்பட்ட கவிஞர்கள் 24 வரிகளை இலக்காகக் கொண்டு கவிதை வாசித்தனர். சோர்வை உணராத  கவியரங்கமாக துவக்கத்திலிருந்து இறுதிவரை இருந்தது. படைப்பாளி அனைவருக்கும் உலகத் தமிழ் கவிஞர் சங்கம் சார்பில் சான்றிதழும், அம்பிகா அறக்கட்டளை சார்பில் கைத்தறி ஆடையும் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இப்படியான சூழலை உருவாக்கிய அன்பை அறுவடை செய்த அருமையான கவிதை அரங்கம். 

இரு அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த ஏற்பாடு மாவட்டத் தலைவர் அண்டனூர் சுரா மாவட்ட பொருளாளர் கவிமதி சோலச்சி இவர்களின் துணையோடு கவிஞர் சந்திரா ரவீந்திரன் அவர்கள் முழு முற்றாக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும்போது ஒத்த புரிதலையும் அவர்களை ஜனநாயகத்தை நோக்கிய திரை மறைவு ஒரு அரசியல் போக்கையும் உறுதி செய்ய முடிகிறது. பெரும்பாலான கவிஞர்கள் வலதுசாரி பின்தங்கிய உளவியலை தங்களின் கவிதைகளில் கருப்பொருளாக அமைத்து இருந்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. குறிப்பாக பெண் கவிஞர்கள் முனைவர் பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் கூட அதை தங்கள் கவிதைகளில் கருப்பொருளாக கொண்டிருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்த ஒரு முழு நிறைவான நிகழ்வாகவே...

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், புதுக்கோட்டை மற்றும் அம்பிகா கல்வி அறக்கட்டளை, புதுக்கோட்டை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...