தாய்மொழி அடிப்படையிலான மருத்துவக் கல்வியின் பயன்கள்
தாய்மொழி அடிப்படையிலான மருத்துவக் கல்வியின் பயன்கள்
ஆசிரியர்:
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
டாக்டர் ஏ.ஆர்.சாந்தி
வெளியீடு :
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
விலை :- 35, பக்கம் 32
தமிழ்வழியில் மருத்துவக் கல்வி இல்லாதது, பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் மிக, மிகப் பின்தங்கிய அடித்தட்டு சமூக மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளது. தமிழ்வழி மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டால், இவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு கிட்டிடும். இதன் மூலம் சமூக நீதி காக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற ஏழை மாணாக்கர்கள், மருத்துவப் படிப்பை எளிதாகப் படிக்கவும். புரிந்துப் படிக்கவும் தமிழ்வழி மருத்துவக் கல்வி உதவும். ஆங்கில மோகத்தையும், ஆங்கில வழியில் படித்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையையும் தகர்க்கும் என்பதை விளக்கும் சிறு நூலாக வெளிவந்துள்ளது.
இன்றைய ஒன்றிய அரசு ஒரே பண்பாடு ஒரே மொழி ஒரே தேர்தல் என்கின்ற முன்வைப்பின் இடையே பல மாநிலங்களின் மொழி அதிகாரம், இறையாண்மை போன்றவை மாநில அதிகாரத்தின் மீது குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது. குறிப்பாக இந்தியாவின் சிறப்பாக இருக்கக்கூடிய பன்முகத்தன்மையின் மீது தாக்குதலாக இருக்கிறது. அது வெறும் மொழியின் மீதும் மட்டும் தாக்குதல் ஹிந்தி பேசாத மாநிலங்களின் மக்கின் சமூகப் பொருளாதார கலாச்சாரங்களின் மீது அவர்களின் வரலாற்றின் மீது தாக்குதலாக இருக்கிறது. அவர்களின் சமூக பொருளாதார வரலாற்றை சிதைக்கும் போக்காக இருக்கிறது. அவர்களின் பாரம்பரிய அறிவுச் சுரண்டலை அதை அற்று போகும் செயலாக இருக்கிறது. மேலும் அதன் வழியாக கற்றலின் வழியாக மாணவர்களுக்கு சுமை ஏற்றுவதும், அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்குவதையும் மைய அரசு செய்கிறது என்கின்ற புரிதலை ஏற்படுத்தக்கூடிய சிறு நூல். பிறமொழி கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால், தாய்மொழி கல்வியை இழப்பதால் எவ்வளவு பெரிய சமூக நெருக்கடி, பண்பாட்டு ஒவ்வாமை, அறிவை பெறுவதில் கூடுதல் சுமை என்பதை அறிவியல் பூர்வமாக தர்க்கத்தோடு விளக்குகிறது இந்த நூல்.
என்னை ஈர்த்த இந்த நூலில் ஆசிரியர்கள் பயன்படுத்திய சில மேற்கோள்கள் உங்கள் பார்வைக்கு...
"மொழி என்பது எந்தக் கடவுளாலும் தரப்பட்ட ஒன்றல்ல. தோற்றுவிக்கப்பட்டதல்ல. எந்த தனிப்பட்ட அறிஞராலும் கண்டு பிடிக்கப்பட்டதல்ல. உருவாக்கப்பட்டதல்ல. திடீரென தோற்றுவிக்கப்பட்டதும் அல்ல."
"மொழி மனிதகுல வளர்ச்சியோடு, மனிதன் பரிணமித்ததோடு, உழைப்பு நடவடிக்கையின் மூலம் தோன்றி வளர்ச்சி பெற்ற ஒன்றாகும். மனிதர்கள், சமுதாயத்தோடு இணைந்து வாழவில்லை எனில் அவர்களுக்கு மொழி என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்"
"மொழியின் இருத்தலுக்கு அது நீடித்து நிலைப்பதற்கு சமூக வாழ்க்கையை அவசியம்"
"உழைப்புதான் மனிதனை உருவாக்கியது"
"உணர்வு (சிந்தனை)தோன்றிய காலத்திலேயே முடியும் தோண்டிவிட்டது உணர்வு ஒரு மனிதனுக்கு மட்டுமே சொந்தம் மொழி ஒரு மனிதனின் உணர்வை பிற மனிதர்களுக்கு சொந்தமாக ஆகிறது இதனால் பிறர் உணர்வை நாம் அறிய முடிகிறது"
"மொழியும் சிந்தனையும் உன்னிடமிருந்து மற்றொன்றை தனித்திருக்க முடியாது சிந்தனையும் மொழியும் தம் இடையே இணைப்பில் சமூகத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சி போக்கில் வளர்ச்சி அடைகிறது"
"மொழி மனிதகுல அறிவின் மாபெரும் சேமிப்பு நிலையமாக இருக்கிறது.
சிந்தனை கருவி மொழி"
"சமூக மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கு மொழி முக்கிய பங்கு ஆற்றுகிறது"
"ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்திக்கும் மொழியாகவும் கனவு காணும் மொழியாகவும் பெரும்பாலும் தாய் மொழியை அமையும்"
குழந்தைகள் "ஐந்து வயதுக்குள்ளயே பத்தாயிரம் சொற்களை நினைவில் பதிவேற்றிக் கொள்கிறது"
"ஒரு தேசம் என்பது மொழி, பொருளாதார எல்லை, பண்பாடு அதன் வழி உருவான உளவியல், வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி, வரலாற்றில் தொடர்ச்சி இவையெல்லாம் கொண்டது" - ஜோசப் ஸ்டாலின்
ஐக்கிய நாடு சபை 1951இல் வடிவமைக்கப்பட்ட மொழி குறித்தான அறிவியல் வகைப்பட்ட ஆய்வு "கல்வியை பொறுத்த அளவில் தாய்மொழியில் கற்பிப்பதை எத்தனை கட்டம் வரையில் நீடித்தாலும் கற்றுக் கொள்வதும் அது எவ்வளவு சாத்தியம் உள்ளதோ அதனை செய்து விட வேண்டும்" என பரிந்துரைத்துள்ளது.
"2005 இல் வெளியிடப்பட்ட அறிக்கை இதையே வலியுறுத்துகிறது"
"நிச்சயமாக இந்த நாட்டை சேர்ந்தவரை ஆங்கில அறிஞராக மாற்ற முடியும். அதனை நோக்கியே நம்முடைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவர்கள் ரத்தத்தாலும், நிறத்தாலும் இந்தியர்களாகவும் அறிவு, ரசனை, கருத்து போன்றவற்றில் ஆங்கிலேயர்களாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்". -மெக்காலே
"மருத்துவம் என்பது பண்பாட்டின் கூறே.
ஒட்டுமொத்த சமூகமே தங்களது மருத்துவத் தேவைகளுக்காக கூட்டாக செயல்பட்டன. மூடநம்பிக்கைகளும், மாயா ஜாலங்களும், மந்திரங்களும், சடங்குகளும், பரிகாரங்களுமே மருத்துவமாக கோலோச்சின. அப்பொழுது மருத்துவத்தின் மீது எத்தகைய ஆதிக்கமும் இல்லை. ஏனெனில் அப்பொழுது வர்க்கங்கள் உருவாகவில்லை. ஆனால், ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் என்ற வர்க்கங்களைக் கொண்ட தனிவுடைமைச் சமூகம் தோன்றியவுடன், மருத்துவக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் வர்க்க நலன்கள் தோன்றி விட்டன."
"இந்தியாவில் மருத்துவர்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டனர், மாற்றப்பட்டனர். பிராமணர்கள் மருத்துவ தொழில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் உருவாக்கப்பட்டது"
"நிலாப்பிரபு காலத்தின் ஆளு வர்க்கத்திற்கான மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ முறைகள் தமிழக மருத்துவத்தை சமஸ்கிருத மயமாக்கினார். சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் பயில தான் என்ற நிலை இது உருவாக்கியது."
"மருத்துவம் பயில சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீதி கட்சி ஆட்சி காலத்தில் நீக்கப்பட்ட பிறகு அடித்தட்டு சமூகத்தில் மருத்துவ கல்வியில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. இது வகுப்புவாரி இட ஒதுக்கெடுக்கும் உதவியது"
"இந்திய மருத்துவ கழகம் (MCI) தமிழ் வழி கல்விக்கு எதிராக இருந்தது. அது உலகளாவிய ஆளுவர்க்கங்களில் நலனை பிரதிபலித்தது பாதுகாத்தது."
"மருத்துவ அறிவியல் தமிழை" வளர்த்த பிறகு தான் தமிழ் வழி மருத்துவக் கல்வி தொடங்க வேண்டும் என்ற வாதம் சரி அல்ல. ஏற்புடையதும் அல்ல தமிழ் மொழி மருத்துவக் கல்வி தொடங்கினால் தான் தேவையின் காரணமாக மருத்துவ அறிவியல் தமிழ் வளரும்."
சாதி ஒழித்தல் ஒன்று
நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று
இதில் பாதியை நாடு மறந்தால்
மறுபாதி துலங்குவதில்லை - பாவேந்தர்
"தமிழ் வழி கல்வி கூட்டி செயல்பாட்டை வலுப்படுத்தும். தமிழ் வழி மருத்துவ கல்வி தரத்தை குறைத்து விடும் என்ற வாதம் உள்ளது இது தவறானதாகும்
"நமது மருத்துவக் கல்வி ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு மருத்துவரை உருவாக்குவதற்கு அல்ல. மருத்துவக் கல்வியும் மருத்துவம் வணிகத்திற்கான அல்ல என்ற அடிப்படை புரிதல் அவசியம்"
"ஆங்கிலேயர் காலத்தில் 1938 தொடங்கிய இந்திய எதிர்ப்பு 1965ல் பேராய கட்சியை அதிகாரத்தில் இருக்கும் போது மீண்டும் தொடங்கியது அது முடிந்து விட்டதாக வசிலர் எண்ணுகின்றனர் அது தவறு எதிர்காலம் இந்தி மற்றும் சம்ஸ்கிருத திணிப்புக்கு கனவு நனவாவது என்பது உறுதி செய்ய வேண்டும்"
"உலகளாவிய மருத்துவ முறையான இன்றைய நவீன அறிவியல் மருத்துவ முறையை தமிழ் வழியில் படிப்பதாகும்"
"நெக்ஸ்ட் தேர்வு மருத்துவ மாணவர்கள் கூடுதல் சுமையாக மாறிவிடும் அவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் புத்தக புழுக்களாக மாற்றி சிகிச்சை சார் அனுபவங்களை பெறுவதில் தடைகளை உருவாக்கும்"
இப்படி ஒரு விரிவான ஆய்வை செய்து தமிழ் வழியில் மருத்துவம் படிப்பது மக்களுக்கு மருத்துவர்களுக்கும் இடையே அதை சார்ந்த பிற பணியாளர்களுக்கு இடையே நெகிழ்வான புரிதலை உருவாக்குவதும் இடைவெளியை குறைக்க உதவும் என்பதும். இன்றைய ஆட்சியாளர்களின் கொள்ளை புற வழி தமிழக மாணவர்களின் மருத்துவ வாய்ப்புகளை பறிக்கும் போக்குகளை விவரிக்கிறது இந்த நூல். அன்பு கூர்ந்து தமிழ் மொழிக்கு ஆதரவு அல்லது பிற மொழி எதிர்ப்பு என்று புரிதலில் இந்த நூலை புறந்தல்லாமல் தாய்மொழி வழி கல்வி எவ்வளவு முக்கியம் உலகிற்கு என்பதை இயங்கியல் வகைப்பட்ட வகையில் சமூக அக்கறையோடு குறிப்பாக கிராமப்புற பின் தங்கிய மக்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் சமூக நிதி அடிப்படை கோட்பாட்டோடு வந்திருக்கிற சிறு நூல். சுருக்கமாக நேர்த்தியாக பல்வேறு சங்க இலக்கிய தரவுகள் நவீன ஐநா போன்ற சர்வதேச நிறுவனங்களின் தரவுகளோடு மொழி குறித்தான நவீன புதிய புதிதலை உருவாக்கக்கூடிய நூல்.
-ஒட்டடை பாலச்சந்திரன்
கருத்துகள்