காரியக்கார கிறுக்குகளின் காலம்...
அமெரிக்காவின் அதிரடி அதிபர் வரி விதிப்புகளை மாத்தி மாத்தி அமைப்பது, தடாலடி அறிவிப்பை கொடுப்பது, பிறகு திரும்பப் பெறுவது என தொடர்ந்து கோமாளி போல நடந்து கொள்கிறார், என சர்வதேச ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை கேலிச்சித்திரங்களும் கிண்டலும் ஏகத்துக்கும் சமூக வலைதளங்களில் கொட்டி கிடக்கிறது.
வர்த்தகப் போர் ஏற்படும் என்று முன்னணி பத்திரிகைகளும், தலையங்கம் எழுதி தள்ளுகிறது. பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் அதை உறுதி செய்வதாக எல்லோரும் நம்புகிறார்கள். பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அனைத்தும், அவர்களின் பொம்மலாட்டங்களே திட்டமிட்டு ஆட்டி வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை அதிகம் சரி செய்ய இன்றைய அமெரிக்க நிர்வாகம் முயல்கிறது. காரணம் மலிவான உழைப்பு கூலி, மூலப் பொருள்கள், வரிவிதம் குறைவு, சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் குறைவு போன்ற காரணிகளால் அமெரிக்க முதலாளிகள் பிற நாடுகளில் முதலீடு செய்வது அதிகரித்து இருக்கிறது. இதனால் வர்த்தக பற்றாக்குறையில் பெரிய இடைவெளி ஏற்படுகிறது. இது வலுவாக இருக்கும் டாலரின் மதிப்பு குறைவதற்கான ஏற்பாடு செய்கிறது. எனவேதான் ஆப்கானிஸ்தான் ஈரான் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து படைகளை அமெரிக்கா திரும்பப் பெற்றது. இப்போது மேலும் சிக்கல் என தெரிந்து உலகை அச்சுறுத்துவதைப் போல நடந்து கொள்கிறது. சீனா நீங்களாக பிற நாடுகள் மீது வரி விதிப்பது போல் நாடகமாடி திரும்பப் பெறுகிறது, சீனாவுக்கு மட்டும் விதிவிலக்கு இல்லாமல் வரியை கூட்டுகிறது.
அமெரிக்காவின் அந்நிய செலாவணி 3% மட்டுமே ஆனால் சீனாவின் அன்னிய செலாவணி 27 % இந்த எதார்த்தத்தை மறைக்க எலி அம்மணமாக ஓடுகிறது. உலக போலீஸ்காரன் இன்றைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தான் போப்பாக விரும்புவதாக போப் போன்று புனைவு செய்யப்பட்ட வடிவம் தன்னுடைய புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். ஜனநாயகத்துக்கு பேர் போன அமெரிக்கா அதிபர் இப்படி கோமாளித்தனமாக பதிவிட முடியுமா? சாத்தியப்படுமா? டொனால்ட் ட்ரம்புக்கு தெரியும் படிப்படியாக உயர் பொறுப்புக்கு வர வேண்டும், பிறகு அதில் பல்வேறு வகையான புரொட்டோகால் ஒழுங்குமுறை அடிப்படையில்தான் கார்டினல்களால் போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படுவார். இது தெரிந்த செய்தி ஆனால் இந்த காரியக்கார கிறுக்கு ஏன் இப்படி குறுக்க மறுக்க ஓடுகிறது?
அப்படியே இங்க இந்தியாவுக்கு வருவோம். பாகிஸ்தான் மீதான போர் பதற்றத்தை அதிகரிக்கிறது இந்தியா, தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கான எந்த முகாந்திரமும் இல்லை. பாகிஸ்தான் மீதான கட்டுப்பாடு அதிகரிக்கப்படுகிறது. விமான பாதைகள் மூடப்படுகிறது, விசா காலாவதி செய்யப்படுகிறது, தூதரக ஊழியர்கள் திரும்ப அனுப்ப திரும்ப பெறப்படுகிறார்கள், மனித போக்குவரத்து இறக்குமதி வரை தடை செய்யப்பட்டு விட்டது, பாகிஸ்தானுடைய அதிகாரப்பூர்வமான சமூகவலை கணக்குகள் முடக்கப்படுகிறது. மூன்றாவது மத்தியஸ்தம் அனுமதிக்காத போக்கு தொடர்கிறது. சிந்து நதி நீரை நிப்பாட்டுகிறது. இங்கும் ஒரு காரியக்கார கிறுக்குகளின் கதை அரங்கேறுகிறது. தொடர்ந்து தங்கள் அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில் இந்திய அரசின் வளர்ச்சி புள்ளி விவரங்கள் பின்னோக்கிய போகிறது. இதிலிருந்து தப்பிக்க நினைக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் மறைமுகமாக மதரீதியான தேசியவாதத்தை வளர்த்து அதற்குள் ஒளிந்து கொள்ள நினைக்கிறார்கள். அதனால்தான் பொருளாதார காரணிகளை மத காரணிகளை விட்டுவிட்டு இப்போது அடுத்த நாட்டு மீதான கட்டுக்கதைகளை அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.
நமது விஸ்வகுரு வகையறாக்களுக்கு தெரியும் பக்தி வேறு, மத அரசியல் வேறு என்று. பக்தி எளிமையாக கடந்து போய்விடும். மத அரசியல் பிற மதத்தின் மீது வெறுப்பாக உருவாக்கி அதன் வழி பதட்ட பண்பாட்டை சமூக முழுவதும் ஏற்படுத்தி அதற்குள் குளிர் காயும் பொருளாதார ஆதாயம் அது. நீண்ட நாளைக்கு இது செல்லுபடியாகாது. தேசிய புள்ளி விவரங்கள் அவர்களை தோலுரித்துக் காட்டுகிறது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள யார் மீது பழி போடுகிறார்கள். ஒரு பீர் வாங்கி குடிக்க சாராயக்கடையை வாங்கி நடத்த எத்தனிப்பது போல் இருக்கிறது. இவர்கள் நடவடிக்கை.
போர் அறிவிப்பை செய்வதன் மூலம் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதன் மூலம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் முழு நூற்றாக ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, மக்களை அச்சுறுத்துவது, காஷ்மீரின் அனைத்து வகை கட்டுப்பாட்டுகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தீவிரவாதத்தை தனிமைப்படுத்த தொடர்ந்து இப்படி முயற்சி எடுக்கிறார்கள் என்றாலும் கூட, போர் போர் என்று சொல்லி பயமுறுத்தி பிறகு கைவிடுவது வேறொரு தந்திர உபாயத்தை எதிரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
அமெரிக்காவின் வர்த்தக போர் நடக்காது, இந்தியா பாகிஸ்தான் போர் நடக்காது. இவை இரண்டிலும் போர் யார் செய்ய விரும்பினார்களோ, நீண்ட நாள் நோக்கில் அவர்களையே பாதிக்கும். பிரச்சனையை தள்ளிப் போடும் நிமித்தம் இப்படி கோமாளி கிறுக்குத்தனங்களை நாடகமாக நடிக்கிறார்கள்.
நிதி மூலதனம் இனி எந்த வழியும் இல்லை என்கின்ற போது, ஜனநாயகத்தை சிதைத்து, பாசிசத்தை கோமாளிகளைக் கொண்டு உலகை ஆள நினைக்கிறது. முடியாத பட்சத்தில்
தள்ளிப் போடும், தட்டிக் கழிக்கும், தவணை சொல்லும்...
(ரஷ்யா உக்கிரன் போரில் காமெடி நடிகரை பல்வேறு தந்திர உபாயங்களின் மூலம் அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகள் அதிகாரத்திற்கு கொண்டு வந்து ரஷ்யாவுக்கு எதிரான துருப்புச்சிட்டாக பயன்படுத்தி, எந்தவித மத்தியஸ்திற்க்கும் வாய்ப்பளிக்காமல் தேசிய வெறியை ஊட்டி சிதைக்கிறார்கள். அன்று நிர்பந்தித்த ஜி8 நாடுகள் இன்று உக்கிரேனை கைவிட்டு விடுகின்றன) கோமாளிகளின் பின்னால் நரிகளே ஒளிந்து இருக்கு.
ஆனாலும் பருவநிலை மாற்றம் - சமமற்ற பொருளாதார பரிவர்த்தனை அவர்களை கேலி செய்ய காத்திருக்கு. காரல் மார்க்ஸ் பிறந்த இந்த நாளில் முதலாளித்துவம் அதற்கான சவக்குழியை அதுவே வெட்டிக் கொள்ளும். இந்த மகத்தான சிந்தனையோடு. மாற்று அரசியலை கைவிடாமல் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கோடு முன்னேற வேண்டும், இல்லையெனில் பாசிசம் வேறொரு வகையில் அதை கைப்பற்றி மேலும் நம்மை பின்னோக்கி இழுத்து விடும்.
"அதுவா மாறும் என்பது பழைய பொய்யடா" பட்டுக்கோட்டையார்
(சண்டை கூடாது என நினைக்கிறேன். கோமாளிகள் என்ன செய்ய காத்திருக்கிறார்களோ? சோசலிசம் என்று சொல்லிய முசோலினி நினைவில்)
கருத்துகள்