போர் போர் அது நீண்ட அக்கப்போர்.
பயங்கரவாதத்தை துல்லிய தாக்குதல் மூலம் தீவிரவாதத்தை அதன் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தும் ராஜதந்திரத்திற்குள், வகுப்பு வாத வெறுப்பு வலிந்து திணிக்கப்பட்டு, சமூக முழுமைக்கும் பதட்டமான ஒரு பண்பாட்டை இந்த ராணுவ நடவடிக்கை உண்டு செய்துவிடும்.
ஊடகங்கள், அரசு, எதிர்க்கட்சி, நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்கள், வரியைப்பு செய்து பிரபலமாக உலா வரும் உயர் குடி சமூகம், போதாக்குறைக்கு செலிப்ரட்டிகள் என எல்லோரும் அரசுக்கு எதிராக கருத்து சொல்லாமல் ஆதரித்தே ஆக வேண்டிய நிர்பந்தம்.
போர் வரியை உயர்த்தும், உயிரிழப்பை ஏற்படுத்தும், உள்நாட்டு வளர்ச்சியில் முதலீடை குறைத்து குண்டுகளாக வெடித்து தள்ளும், உறுதியற்ற பொருளாதாரத்தால் உற்பத்தி குறையும், உணவு பற்றாக்குறை, பதட்டமான உள்ளூர் நெருக்கடிகளை உருவாக்கும், ஊரடங்கு, மின்தடை, போக்குவரத்து பாதிப்பு, வேலை இழப்பு, கல்வி இழப்பு, தினந்தோறும் உயிரிழப்பு பட்டியல்கள் வந்து கொண்டே இருக்கும். சுற்றுலா போன்ற அந்நிய செலாவணி குறையும்.
போர் புலிவாலை பிடித்த கதை. வளரும் நாடு வேறொரு தந்திர உபாயத்துக்கு முயற்சிக்கலாம். பயங்கரவாதம் தீர்க்க வேண்டிய ஒன்று, பொது சமூகமும் பாதிக்காத வகையில், நாடுகள் இணைந்து செய்ய வேண்டும். பிற நாடுகள் அழுத்தம் கொடுத்து ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரலாம்.
பணம் படைத்தோர் நெடுநாள் போரால், பிற நாடுகளுக்கு குடி பெயற முதலீடுகளையும் எடுத்துச் செல்வார்கள். அப்பாவி உழைக்கும் மக்கள் வரி சுமையால் அழுத்தப்படுவார்கள். ஊழல் தலை விரித்தாடும். இந்தியா போன்ற படிநிலை பண்பாடு கொண்ட நாட்டில் இடர்பாடு காலங்களில் அரசு எந்திரம் தேங்கிப் போவதும், ஊழல் மலிந்து போவதும் இயல்பான ஒன்றாகிடும். ஊழல் கொடிக்கால் பூதமாக மாறிடும்
போர் தீர்வல்ல.
போர் முடிவல்ல, போர் பேரழிவின் தொடக்கம். பெரும்பான்மை உழைக்கும் மக்களும், அடிப்படை ராணுவ சிப்பாய்களும் பாதிப்பார்கள், உயர் பொறுப்பு சமூகம் லாவகமாக கடந்து செல்வார்கள்.
எல்லையில் வாழும் பெண்கள், குழந்தைகள் சொல்லன்னா துயரத்திற்கு உள்ளவர்.
போர் அன்பை சொல்லித்தராது. அகங்காரத்தையே சமைக்கும். அன்பை கனவாக காணவோ, திரையில் ரசித்து ஏங்கலாம். செக்கு மாடு போல் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு, அன்பை ஏக்க கனவு கண்டு கொண்டே உழல வேண்டியதுதான்.
போர் ஒரு கொடுங் கனவு.
பெரும்பான்மை அதிகார கணக்கு துவக்கத்தில் பெரிது போல் தெரியலாம், சிறிய முள் மொத்த உடலையும் ஆட்டி வைக்கும்.
-ஒட்டடை பாலச்சந்திரன்
கருத்துகள்