இந்திய கிராமம் - நூல் அறிமுகம்

#இந்திய_கிராமம்
ஆசிரியர் (இந்தி மூலம்) : 
இரவீந்திர தன்வந்த் ஹலிங்கலி
மொழிபெயர்ப்பு : நாணற்காடன்
முதல் பதிப்பு: பிப்ரவரி - 2025
வெளியீடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவை மாவட்டக்குழு
பக்கம் 64 - ₹. 70/-

சுதந்திரத்திற்கு முன் உள்ள இந்திய கிராமங்களில் குறுக்கு வெட்டு தோற்றத்தை, பொருளாதாரப் போக்கு சமூக கட்டுமானம், அதிகாரம், கடமை, உரிமை, வழிபாடு, கல்வி அரசியல் என எல்லாவற்றையும் இயங்கியல் வழியில் ஆய்வு செய்து சுருக்கமாக நமக்குத் தரும் சிறு நூல் இது. இந்தியா முழுமைக்கும் பொதுவான புரிதலில் புரிந்து கொள்ளக்கூடிய எளிய தமிழில் மொழிபெயர்ப்பாளர் நாணற்காடன் சிறப்பு பணியை செய்திருக்கிறார். நூலின் ஆசிரியர் ரவீந்திர தன்வந்த் ஹலிங்கலி கர்நாடகாவை சேர்ந்த முனைவர் அறிவியல் வகைப்பட்ட ஆய்வு முறையில் இந்திய கிராமங்களில் போக்கை அதன் பொருளாதார அடித்தளத்தை அதன் மீது கட்டப்பட்டுள்ளது சாதி மதம் அதன் மீது கட்டப்பட்ட அரசியலை வகைப்படுத்தி உள்ளார். குறிப்பாக சூத்திரர்களின் கடந்த கால போக்குகளையும் அதன் மீது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சாதுரியமாக தவிர்த்ததையும் ஆசிரியர் காட்சிப்படுத்துகிறார். அம்பேத்கரின் இந்தியாவில் சாதிகள் ஆய்வு பெரிய விரிவான கட்டுரை என்றபோதும் எல்லோரும் புரிந்து கொள்ளும்படியும் எளிய சிறு நூலாக வெளியிட்டு இருக்கும் கோவை மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெரும் மன்றத்திற்கு நன்றி. 

"இந்திய சமூகத்தின் பாரம்பரியமான, இறுக்கமான சாதியப் பிரிவினை அடிப்படையில் பொருளுற்பத்தி நடக்கும் போது அதன் உற்பத்தியாளர்கள் தங்களது பரம்பரைத் தொழிலை மாற்றிக் கொள்ள முடியாது. இதனால் அவர்களது சமூக பொருளாதார நிலையில் முன்னேற்றமும் ஏற்படாது.
மேலும் இந்த சாதிப் படிநிலை ஒரு பிரமிடு போல அமைந்துள்ளது. வேடிக்கையாக, அடித்தளத்திலுள்ள பட்டடியலின சாதிகளிலும் இது போன்ற படிநிலை காணப்படுகிறது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்திலுள்ள அறுபது பட்டியலின சாதிகளில் இந்த உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஏற்றத் தாழ்வு காணப்படுவதாக, புகழ்பெற்ற சமூகவியல் அறிஞர் எம். என். சீனிவாஸ் தனது ஆய்வின் முடிவாக தெரிவித்துள்ளார்.
ஆக, இந்திய கிராம சமூகத்தில் இந்த ஏற்ற தாழ்வான படிநிலை அமைப்பு ஒரு மையமான அம்சமாக இருக்கிறது.
பொருளாதார அமைப்பு மாற்றியமைக்கப்படாமல் இந்த சாதியச் சிக்கலைத் தீர்க்க முடியாதென்பது மார்க்சியத்தின் அடிப்படையிலிருந்து பெறப்படுகிறது.
மன்னராட்சிக் காலங்களில் பல்லக்குத் தூக்குவோராக இருந்தவர்கள் இக்காலத்தில் 'பக்தர்' எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றனர். எனவே அவர்களின் அறிவு வளர்ச்சியடையாமல் மழுங்கடிக்கப்பட்டு, அவர்கள் மனித எந்திரங்களாக அடிமை உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 
- ஆனந்த் டெல்டும்டே

சில மேற்கோள்கள்...

"கிராமங்களில் வசிப்பவர்கள் அடிமைகளாக அற்பமானவர்களாக அடிமனிந்தவர்களாக மற்றும் கீழ்படிந்தவர்களாக இருக்கிறார்கள் மறுபடியும் சிலர் ஆடம்பரமானவர்களாக சர்வாதிகாரம் கொண்டவர்களாக துரோகிகளாக கொடூர மனம் படைத்தவர்களாக இருப்பதை காண முடியும்" - இந்திய கிராமம் குறித்து ராபர்ட் கிளைவ் 

முகலாயர் பிரிட்டிஷ் எந்த படை இடுப்பின் போதும் யாரும் "ஜாதியை கேள்வியை கேட்க முடியவில்லை" 

"கற்பனையான உலகம் பற்றிய கனவைக் காட்டி, இந்த உண்மையான உலகத்தை விட்டு விட வேண்டுமென்று மக்களை ஏமாற்றுவதற்குத்தான் நமது ஆன்மிகக் கோட்பாடு"

"தொழிலாளர் பிரிவினை சாத்தியமாகி, சாதிய படிநிலை ஒரு அதிகாரமுள்ள கட்டமைப்பாக நிறுவப்பட்டது"

"கிராம சுவராஜியம் - தேங்கிய பொருளாதாரமாக மட்டுமே இருக்கிறது."

"வாழ்க்கையின் எளிய உண்மையில் கூட மர்ம முடிச்சுகளுடன் புடங்கப்படுகின்றன"

"இயற்கையை வழிபடுகிற அவனது இயல்பான சுபாவம் அதிகாரத்தில் உள்ளவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்கிற உணர்வைத் தந்தது."

"அடிக்கோடிட்டுப் பார்க்க வேண்டியது என்னவென்றால் ஜாதி அமைப்பின் தீமைகள் வேர் வரை சமூக, மத சீர்த்திருத்தங்கள் எட்டுவதில்லை.-

"பாட்டாளி வர்க்கமே ஒரு ஒன்றுப்பட்ட அணியை உருவாக்கவில்லை என்றால், புரட்சி எப்படி ஏற்படும்?" - அம்பேத்கர் 

இப்படி இந்திய சமூகத்தின் அறிவியலை அணுகாது இருக்க பல்வேறு கட்டுக்கதைகள் நம்பிக்கை இன்மை உண்மையாக அவர்கள் உயிர்த்து உணரும பொருள் சார்ந்த வாழ்க்கை முறை விட்டு தங்களால் எட்ட முடியாத கனவு மட்டுமே காணக்கூடிய மாயவாதங்களை கொண்டு இன்றளவும் மக்களை ஏமாற்றுகின்ற படிநிலைப் பண்பாட்டை ஆய்வு செய்யும் சிறுநூல்.
இன்றைய இளைஞர்கள் சாதி குறித்த புரிதலுக்கு உகந்த சிறிய நூல்.

- ஒட்டடை பாலச்சந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்