A.I. செயற்கை நுண்ணறிவு யுகம். அடே அப்பா...
செயற்கை நுண்ணறிவு வரமா! சாபமா? தொழில் நுட்பங்கள் யார் கையாளுகிறார்களோ அவர்களின் வசம். இன்று ஏகபோக முதலாளிகளின் கைகளில். சோசலிச அதிகாரத்தின் கீழ் மக்களுக்கான வாய்ப்பாக அமையும்.
ஏகபோகங்கள் மக்களை ஏமாற்றி இயற்கையை லாவகமாக சட்டங்கள் ராணுவம் நீதி பரிபாலனை இவைகளை தாண்டி செயற்கை நுண்ணறிவுகள் உலகை கட்டிப்பட போகிறது. திறனற்ற தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். ஊதிய உயர்வு அகங்காரங்கள் அடக்கி ஒடுக்கப்படும். அதே நேரம் பின்தங்கிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு
அளப்பரிய முன்னேற்றம் உலகை மேலும் மக்களிடையே இடைவெளியை ஏற்படுத்தும்.
அளப்பரிய முன்னேற்றம் உலகை மேலும் மக்களிடையே இடைவெளியை ஏற்படுத்தும்.
குறிப்பாக மின்சார தயாரிப்பு போன்ற ஆற்றல் துறைகள் செம்மையாக்கப்படும். சுற்றுச்சூழல் சவால்கள் கண்காணிப்பில் கட்டுக்குள் வரும். ஆனால் தீர்க்க இயலாது. பல துறைகளில் இலவச செயற்கை நுண்ணறிவு வலைதளங்கள் அடே அப்பா ரகங்கள் ஆச்சரியத்திற்குள். இன்னும் மேம்படுத்தப்பட்ட கட்டண பதிப்புகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். வேலைவாய்ப்பை அழிக்கும்.
சமீபத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களை பேட்டி எடுப்பதற்காக தயாரானேன். அவரும் அவருடைய பழைய பேட்டிகளை மணிவிழா மலரை தொகுப்புகளை எனக்கு வழங்கினார் இதில் இல்லாத கேள்விகளை கேளுங்கள் என்றார். அவைகளை எல்லாம் தொகுத்து அதை ஒழுங்கு செய்து கொண்டிருந்தேன். அப்போது google Note LM என்ற செயலியை எதிர்பாராத விதமாக கவனிக்க நேர்ந்தது. அவருடைய மூன்று தொகுப்புகளையும் அதில் கூகுள் லென்ஸ் மூலம் டாக்குமெண்டாக மாற்றி அதை கூகுள் notebook LM இல் தொகுத்த பிறகு கேள்விகளாக வகைப்படுத்தினேன். ஐந்து நிமிடத்திற்குள் சரி செய்து விட்டது. அடேயப்பா ரகம். சின்ன எடிட் வேலைகள் மூலம் பெரிய லாபத்தை அடைந்தேன்.
பிறகு இணையத்தில் இருக்கும் இலவச நுண்ணறிவு தளங்களை அணுகும் போது ஆச்சரியத்திற்குள்ளானேன். என்னுடைய ஒரு புகைப்படத்தை பதிவேற்றி வெவ்வேறு கலர் வடிவங்களில் கேட்க கேட்க செய்து கொடுக்கிறது. இத்தனைக்கும் இது chatgpt இலவச பதிப்பு பணம் கொடுத்து பெற்றால் அடேயப்பா ரகம் தான் போலிருக்கிறது.
கவிதை, சிறுகதை, பிழை திருத்தி, கேள்விகளுக்கு பதில்! வலைதள குறிப்புகள்! என ஏகத்துக்கும் என்ன என்னவோ உள்ளது. சிறுகதை கவிதை கட்டுரைகள் என இனி எல்லாவற்றிலும் உயிர்ப்புடன் கூடிய கடின உழைப்பிற்கு மதிப்பு இருக்காது. புதிய செயற்கை அழகியலுக்கு அதிக வரவேற்பு இருக்கும். இது கவலை அளிக்கும் உழைப்பு சுரண்டல் என்றாலும், அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்தான் வேண்டி இருக்கிறது. என்ன? உணவுகளையோ, உயிரினங்களையோ உருவாக்காது, ஒழுங்கமைக்கும்.
தொகுக்கப்பட்ட மனித ஆற்றல் சேமிப்பு மாதிரிகள், இனி அரைவேக்காட்டுத்தனங்களை அடையாளம் காட்டி, அரை குறை ஞான மனிதர்களை வெளியேற்றும். பம்மாத்துக்கள் இனி செல்லுபடியாகாமல் போகலாம். இருந்தும் வரவேற்கிறேன். பரந்துபட்ட சவால்களை குறித்துணர, அதன் தரவுகளின் வழி அதை ஒழுங்கமைப்பது சிறப்பான செயலை செய்யும். நீண்ட நாள் உடல் உபாதை குறித்து தமிழில் கேள்வி கேட்க பதில் தந்தது. அதை நம்பவில்லை மருத்துவரிடம் பரிசோதனை செய்ய அவர் அதற்குரிய மருந்தை கொடுத்தார். இப்படி பல அனுபவங்கள் ஆச்சரியத்துக்கு உள்ளாக்க... என் கேள்விகள் இனி என் குறித்தான முழு தகவலையும் சேகரித்து எனக்குத் தேவையானவைகளை பட்டியலிடும். முகநூல் இணையம் whatsapp என எதில் ஒரு நடவடிக்கை குறித்து நான் ஆர்வம் காட்டினேன் என்றால் உடனே எல்லாவற்றிலும் அதற்கான விளம்பரம் சலுகைகள் தொடர்ந்து வருகிறது. நான் கண்காணிக்கப்படுகிறேன் கவனிக்கப்படுகிறேன் ஊக்கப்படுத்தப்படுகிறேன் மெது மெதுவாக அதன் மலிவு விலை நுகர்வுக்கு தயாராகி அடிமைப்படுத்தப்படுகிறேன். இது இனி எல்லாவற்றிலும்...
ஆக செயற்கை நுண்ணறிவு சோசலிச அதிகாரத்தில் அது மக்களுக்காக பணியாற்றும். ஏகபோகத்தில் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ ? இப்போது நான் நுகர்வு பொருளாக...
தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள், தயாராகுங்கள், இல்லையென்றால் தனிமைப்பட்டு போவீர்.
15 நிமிடங்களில் சில மாதிரிகள்
கருத்துகள்