சாரத என்ற எஸ். நடராஜன்
தெலுங்கில் அழியாப் படைப்புகளைப் படைத்த தமிழன் சாரதா (எ) எஸ். நடராஜன்
1924ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த நடராஜன், சாரத என்ற புனைப்பெயரில் தெலுங்கில் அழியாப் படைப்புகளைப் படைத்த அற்புதமான படைப்பாளி. சுப்பிரமணிய ஐயருக்கு மகனாகப் பிறந்த நடராஜன் பிழைப்புக்காக சென்னை சென்று, அங்கும் வாழ வழி இல்லாமல் தனது அக்காவை திருமணம் செய்து கொடுத்த தெனாலிக்கு தனது 13ஆம் வயதில் அடியெடுத்து வைத்தார். வயிற்றுப் பிழைப்புக்காக ஹோட்டலில் சர்வராக வேலை செய்து சிறிது சிறிதாக முன்னேறி சமையல் மாஸ்டராகப் பணிபுரிந்தார். இந்த வேலைகளிடையே கிடைக்கும் நேரத்தை எல்லாம் தெலுங்கு புத்தகங்களை இடைவிடாமல் படித்து தெலுங்கு மொழி அறிவை வளர்த்துக் கொண்டார். அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு சமூகம் பற்றிய விசாலமான பார்வையை பெற்றுக் கொண்டார்.
1946இல் கையெழுத்தாலான சிறு பத்திரிகையை ஆரம்பித்து தனது இலக்கியப் பயணத்தை தொடங்கிய நடராஜன் படிப்படியாக சிறுகதைகள், நாவல், நாடகம்,விமர்சனம் என்று தனது இலக்கிய எல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக விரித்து 1955இல் மரணம் அடையும் வரை இலக்கியப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் முழுவதும் வறுமையும், துன்பமும் நடராஜன் வாழ்வில் பிரிக்க முடியாதவையாகப் பின்தொடர்ந்தன. இந்தச் சூழலில் நடராஜனின் நண்பர்கள் அவரைப் பாதுகாத்து பத்திரப்படுத்தினர். 31 வருடங்களே வாழ்ந்த நடராஜன் தனது பத்தாண்டு கால இலக்கியப் பயணத்தில் தெலுங்கு மொழியில் இன்றளவும் பேசப்படும் நாவல்களையும், சிறுகதைகளையும் படைத்துச் சென்றுள்ளார்.
1942ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த நடராஜன், சாரதா என்ற புனைப்பெயரில் தெலுங்கில் அழியாப் படைப்புகளைப் படைத்த அற்புதமான படைப்பாளி. தனது அக்காவை திருமணம் செய்து கொடுத்த தெனாலிக்கு தனது 13-ஆம் வயதில் அடியெடுத்து வைத்தார். வயிற்றுப் பிழைப்புக்காக ஹோட்டலில் சர்வராக வேலை செய்து சிறிது சிறிதாக முன்னேறி சமையல் மாஸ்டராகப் பணிபுரிந்தார்.
இந்த வேலைகளிடையே கிடைக்கும் நேரத்தை எல்லாம் தெலுங்கு புத்தகங்களை இடைவிடாமல் படித்து தெலுங்கு மொழி அறிவை வளர்த்துக் கொண்டார். அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு சமூகம் பற்றிய விசாலமான பார்வையைப் பெற்றுக்கொண்டார்.
1946-இல் பிரஜாவாணி என்ற கையெழுத்தாலான சிறு பத்திரிகையை ஆரம்பித்து 3 பிரதிகளை தயார்செய்து ஒன்றை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும், ஒன்றை நகராட்சி நூலகத்திலும், மற்றொன்றை நண்பர்கள் மத்தியில் சூழன்று வரும்படி செய்தார். நடராஜன் படிப்படியாக சிறுகதைகள், நாவல், நாடகம், விமர்சனம் என்று தனது இலக்கிய எல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக விரித்து 1955-இல் மரணம் அடையும் வரை இலக்கியப் பயணம் மேற்கொண்டார்.
சாரதாவின் அண்ணனின் முயற்சியினால் தனது நண்பனின் தங்கையா விதவையான அன்னபூரணியை சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாலை மாற்றிக்கொண்டு பதிவு திருமணம் செய்து கொண்ட முற்போக்கான சிந்தனைக் கொண்டவர் சாரதா.
சாரதா 'நல்லதும் கெட்டதும்', 'அபஸ்வரங்கள்', 'உண்மை எங்கே?', 'இருள் திரைகள்', மஹீ பதி', 'அழகிய தீவு' ஆகிய நாவல்களும் 'ரத்தஸ் பரிசம்', சிறுகதை தொகுப்பு, 'நரபலி', 'அகல்யா' போன்ற நாடகங்கள் 'க்ஷணத்தில் பாதி' நகைச்சுவை விமர்சனம் போன்றவை அவரின் பெயர் சொல்லும் அழியாத படைப்புகள். படைத்த சாரதா என்ற எஸ் நடராஜன் வாழ்க்கை வரலாற்றை நமது அகில இந்திய முற்போக்கு பேரவை அவரின் நூற்றாண்டு விழாவை அவர் பிறந்த ஊரான
தமிழ்நாட்டிலுள்ள, புதுக்கோட்டை என்ற ஊரில் ஒரு நடுத்தர பிராமண குடும்பத்தில் பிறந்த எஸ்.நடராஜன் என்ற பன்னிரண்டு வயது சிறுவன் தெலுங்கு நாட்டின் தெனாலி என்ற ஊருக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்து சென்று வாழ்ந்த நாட்களின் சுக துக்க அனுபவங்களின் பிரதிநிதியாய், தெலுங்கு முற்போக்கு இலக்கிய வளர்ச்சியில் சுயகல்வி, சுயமுயற்சியால் எழுத்தாளனாய். கவிஞனாய் இலக்கியத்தின் சகல அங்கங்களிலும் தனித்துவ முத்திரைபதித்த சாரதவை தன் முன்னோடி எழுத்தாளனாய் சிகரத்தில் ஏற்றி தெலுங்கு உலகினர் இன்றளவிலும் விடிவெள்ளியாய் கொண்டாடும் விதத்தில் சிறந்த நூலை எழுதிய ஜிஆர்.கே.மூர்த்தி என்ற விஹாரியை எத்தனைப் புகழ்ந்தாலும் தகும்.
அந்த வகையில் நடராஜன் என்ற சாரதனின் எழுத்துலக பயணத்தின் ஒவ்வொரு அம்சங்களையும், கவிதை, கல்பகம், இதிவிருத்தாந்தம், பத்தி, கேலிச் சித்திரம், நாவல், சிறுகதை என அனைத்து இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கிய, மிகமிகக் குறைந்த வயதில் சாதனைப்படைத்து மறைந்த படைப்பாளரை, இத்தனை நுண்ணிய கண்ணோட்டத்துடன் அன்றைய காலத்தில் வாழ்ந்த பல முன்னணி எழுத்தாளர்களையும், எழுத்தாளர்களின் விமர்சனங்களையும் இந்நூலில் வெளிக்கொணர்ந்த நேர்த்தியை, மனித நேயத்தை, சமத்துவ நோக்கை, படிக்கப் படிக்க வியப்பாகவே இருந்தது.
பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை இலக்கியத்தின் உச்சம் தொட வைத்ததென்றால், நடராஜன் என்ற சாரதவின் தெனாலி வாழ்க்கை தெலுங்கு சாகித்ய உலகில் பெயர் சொல்லத்தக்க எழுத்தாளர்களின் முன்னோடியாய் அன்புக்கும், மனிதநேயத்திற்கும், சமத்துவ முன்னேற்ற சிந்தனையின் நாயகனாய் பிரதிபலிக்கச் செய்தது. அவனின் அறிவுத்தாகமும், விடாமுயற்சியும் பாராட்டத்தக்கது.
தனிமனித வாழ்வின் வறுமை என்ற கொடிய துன்பரேகை, மிகக் குறைந்த வயது,உலகம் சார்ந்த முற்போக்கு சிந்தனை வியாபகம், சாதி, சமய வேறுபாடற்ற, சமத்துவப்பார்வை, எதிர்காலத் தொலை நோக்குப்பார்வை என்ற நற்சிந்தனை நாயகன் பாரதியின் கருத்துச்சாயல் நடராஜனுள் காணலாம்.
சாரதா பிறந்த புதுக்கோட்டையில் அவரின் நூற்றாண்டினை கொண்டாடும் விதமாக 2024 டிசம்பர் கடைசியில் அவர் குறித்தான அறிமுக நூலை 'கஷ்ட ஜீவி சாகித்திய சிரஞ்சீவி சாரதா எஸ் நடராஜன்' அவரின் சுய சரிதை நூலினை தெலுங்கில் விஹாரி வெளியீட்டை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக ராஜேஸ்வரி கோதண்டம் அவர்கள் மொழிபெயர்ப்பில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மாநிலச் செயலர் அறம் தலைவர் கங்கா பொருளாளர் ப.பா. ரமணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முற்போக்கு பேரவையின் தேசிய தலைவர் சாகித்திய அகடாமி விருத்தாளர் லட்சுமி நாராயணா, ஆந்திர மாநில முற்போக்கு பேரவையின் செயலாளர் ஆகியோரும் பங்கு பெற்றனர். நூலினை படிப்பதன் மூலம் அவருடைய முழு வாழ்க்கையும் புரட்சிகர உழைப்பாளியின் சமூக தாகத்தையும் அர்ப்பணிப்பையும் இலக்கிய வாயிலாக அவருடைய ஆளுமையை சமூகத்துக்கு பயன்பட்ட வாழ்வியல் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்