அலைகளில் நெளியும் நிழல்... சாத்தூரில் அறிமுகம்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் தனுஷ்கோடி ராமசாமி நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த கவிதை குறித்த உரையாடல். கலை இலக்கிய பெருமன்ற பொதுச்செயலாளர் மரு. த.அறம் அவர்களின் சாத்தூர் மருத்துவமனை மூன்றாவது தளத்தில் அமைந்த தனுஷ்கோடி ராமசாமி நினைவு குளிர்மை அரங்கத்தில் இந்நிகழ்வு 10.8.25 காலை பத்தரை மணிக்கு தொடங்கி மாலை நாலு மணி வரை உணவு உபசரிப்போடு நடைபெற்றது.

பாவலர் கணேசன் அவர்களின் பாடல் கூடவே தபேலா சிறப்பாக அமைந்திருந்தது. கவிஞர் செல்லா அவர்களின் "ஒரு கூடை பூக்களும் ஒரு துளி வாழ்வும்" முதல் அறிமுகமாக துவங்கி இரண்டாவது எனது நூலும், மூன்றாவதாக கவிஞர் நாகாவின் யாரிடத்திலும் புத்தன் இல்லை இறுதியாக கவிஞர் கணேசனின் பாமரனுக்கோர் பாட்டு புதையல் என்ற நான்கு நூல்களும் அறிமுகம் விமர்சனம் என நிகழ்ச்சிக்கு இடையே கைப்பேசியை துலாவிக் கொண்டிருக்கும் கூட்டமாக இல்லாமல் எல்லோரும் கவனம் குவித்த கட்டுக்குள் நேர மேலாண்மைக்குள் அமைந்த செறிவு மிக்க உரைகள்.

ஏற்புரை...

படைப்பாளிகள் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒவ்வொரு நூலுக்கும் இரண்டு கோணங்களில் விமர்சன அணுகுமுறை அற்புதமான ஏற்பாடு. வாசிப்பு பழக்கமுள்ள ஒருவரும், கல்லூரி மாணவர் என இரண்டு கோணங்களில் நூலையும் அறிமுகப்படுத்தியதும், அதன் மீது ஏற்புரை என அழகான நிகழ்வு.

தோழர் மழயிசை மதிப்புரை

புதுமுக மாணவர்களின் விமர்சனங்கள்  மதிப்பிற்குரியவையாகவும் இருந்தன. எல்லோரும் பொறுப்புணர்ந்து நூலை படித்து குறிப்புகளுடன் வந்து அதை பல கோணங்களில் அலசி கவிஞர்களைத் தாண்டி பார்வையாளர்களிடம் நூலை கொண்டு சேர்த்தார்கள் என்பதில் மிகை இல்லை. 

தோழர் வெங்கடேசின் மதிப்புரை

பொதுச் செயலாளர் அறம் அவர்களின் ஒவ்வொரு நூல் குறித்தான விட்டுப் போன பகுதிகளை கவனத்திற்கு கொண்டு வந்த பாங்கும் சிறப்பு. என்னுடைய மூன்றாவது தொகுப்பான அலைகளில் நெளியும் நிழல் 20 நாட்களுக்குள் முகநூல், வாட்ஸ்அப். நேரடியாக என வரவேற்பு உரிய விமர்சனங்களை பெற்றது. நூல் கைவரைப் பெற்று 25 நாட்களுக்குள் வெளியீடு, அறிமுகம் நேர்மறையான விமர்சனங்கள் என பரவலாகிறது.

தோழர் கணேசனின் பாடல்...

நேற்றைய தினம் சாத்தூரிலும், திருப்பூரிலும், எனது கவிதை தொகுப்பு ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. பல நூல்களை நாம் அறிமுகதை பார்த்தபோதும், நமது நூல் அறிமுகத்தின் மதிப்புரையை முதலில் நேற்று தான் கண்டோம். கடினமான கவிதையை வாசித்து அவர்கள் அறிமுகம் செய்தது ஆச்சரியம் தான். குறிப்பாக மழயிசை அவர்கள் pdf-ல் படித்ததும் கவிதை நுட்பங்களை விவரணப்படுத்தி  அறிமுகம் செய்தது, உடனடியாக வாசித்து வெங்கடேசன் தன்னை பாதித்த கவிதைகளை விவரணப்படுத்தி அறிமுகம் செய்தது மகிழ்ச்சியே. பெரும்பாலும் அறிமுக கூட்டங்களில் நல்ல நூல்களுக்கு சிறந்த அறிமுகம் இல்லாமல் கவனகுவிப்பு இன்றி போய்விடும். சுமாரான நூல்களுக்கு நல்ல அறிமுகங்கள் கிடைத்துவிடும். இது எதிர்பாராமல் நடப்பது தான். அந்த வகையில் நல்ல அறிமுகம் நன்றி தோழர்களே.

கவிதை தொகுப்பு குறித்து இரண்டு அறிமுகங்களும் எனக்கு சிறப்பாகவே அமைந்தன. வடிவேல் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் (கொஞ்சம் ஓவரா தான் போயிடுச்சோ...). எனது நூல்களுக்கான முதல் அறிமுக கூட்டம் இதுதான். அந்த வகையில் சிறப்பாக அறிமுகம் செய்து, பலரும் என் கவிதையை நூலை கேட்டுப் பெற்றது மகிழ்ச்சி. அந்த வகையில் நேற்றைய நிகழ்வு அகமகிழ்வுக்குறியதாக அமைந்தது. 
திருப்பூரில் அறிமுகம்...

இளம் படைப்பாளர்களுக்கு வலிந்து வாய்ப்பை உருவாக்க வேண்டும். அறிமுகம் மதிப்புரை வழங்கிய அனைத்து இளம் படைப்பாளர்களின் நம்மை அறிமுகப்படுத்தியது வாழ்த்துறையாகவே இருந்தது.
 
உண்மையான பொருளில் வரும் இளம் தலைமுறை நம் புடைப்பை புரிந்து கொண்டு  வாசிப்பவர்களிடம் சேர்க்கும் பேச்சுத் திறன் படைப்பை பரவலாக்கும் வாழ்த்துரையாகவே இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்