யாத்வஷேம் - நூல் அறிமுகம்
யாத்வஷேம் - நேமிசந்த்ரா
மூலம் கர்நாடக
தமிழில்: க. நல்லதம்பி
கர்நாடகம், மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகடாமி விருது பெற்ற புதினம்.
எதிர் வெளியீடு, ₹ 450
ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம் பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான் வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில், எங்கும் ஹிட்லரின் 'மை கேம்ப்' பளபளக்கும்? பிரதிகள் கிடைக்கின்றன. எங்கிருந்து மறுபடியும் இந்த உற்சாகம் ஏன் அவன் 'வெற்றி' ஆர்வத்தைத் தூண்டுகிறது. யாருக்கு இலட்சியமாகிறான்? ஹிட்லர் மறுபடியும் பாராட்டுக்குரியவனாகிறானா? கேள்வி என்னை வாட்டுகிறது. பயமுறுத்துகிறது 12 வருடங்களுக்கு முன்பு, கோரிப்பாளையத்து இந்த யூதர்களின் சமாதிகள், எனக்குள் ஒரு கதையப் பிறக்கவைத்தன. ஹிட்லரின் மண்ணிலிருந்து காந்தியின் மண்ணிற்கு வந்த குட்டி யூதச் சிறுமியின் கதை அது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் நான் பார்த்த யூதர்களின் உலகை நாவலில் திறந்துகாட் முயன்றேன். அன்று பற்றி எரிந்தது ஜெர்மனி, நின்று பார்த்தது உலகம். இன்று ஹிட்லர் எங்கே
வேண்டுமென்றாலும் பிறக்கலாம். அமெரிக்காவில், ஜெர்மனியில்,
இஸ்ரேலில், 'அகிம்சையே உயர்ந்த தர்மம்' என்று முழங்கும் இந்தியாவில்
கூட, 'நம் நடுவில் எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கலாம்', நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது என்ற நம்பிக்கையின் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. " இந்த நாவல் குறித்தான அட்டை பின்புறம் இடம் பெற்றுள்ள இந்த வாசகம் விமர்சனமாக போதுமென்று நினைக்கிறேன். வாசிக்கும் போது எனக்கு பிடித்த வாக்கியங்கள்.
"ஹிட்ரின் பேச்சில் இருந்தது மாயம் மட்டும் அல்ல, இந்தமக்களின் இதயத்தில் நூற்றாண்டு காலமாக உள் அணுவாக மீதமிருந்த யூத வெறுப்பு, இனவெறி இன்று வெடித்தது"
"ஹிட்லர் இங்கு வெளிேய இல்லை என்று எனக்கத் தோன்றியது. நம் நெஞசங்களின் சகிப்புத்தன்மையில் ஹிட்லர் இருக்கிறான். நம் அகங்காரத்தில் ஹிட்லர் இருக்கிறான் நம் வறட்டுகௌரவத்தில். எந்த விநாடியும் கலவர்த்தை
உண்டாக்கி, இரத்தம் சிந்துவதைப் பார்த்துக் களியாட் ஆட காத்துக்கொணடிருக்கும் ஹிட்லர் இருக்கிறான. அநேகமாக நமக்குள்ளேயே அவனுடய அழிவு ஏற்படேவண்டும் நமக்குள்ளேயே... "
"செய்தி ஊடகம் நாஜிகளின் கையில் தங்கள் பிரச்சாரத்திற்கான வலுவான ஆயுதமாகப் பயன்படலாம் என் சந்தேகம் தப்பானதல்ல..."
"நாங்கள் மனிதர்களாக இருக்கவில்லை. கேவலம் ஒர பிரச்சனையாக இருந்தோம்.எ உலகம் தீர்வு காண விரும்பாத பிரச்சிைனையாக "
"ஹிடலைரப் போன்ற மனிதன் வரலாற்றின் வெற்றிடத்தல் தனனந்தனியாகத் தோனறுவதில்லை "
"நமக்குள் இருக்கும் எந்த இருள்நிறைந்த இரகசிய பாகம் மற்றோருவரின் சாவை இத்தனை அமைதியாகத் திட்டமிட்டது! இவர்கள் எல்லாம் வெள்ளந்தி மக்களா இல்ல அறிவற்றவர்களா?"
"நெஞ்சில் பற்றி எரியும் வெறுப்பின் புகையில், யார் பாதுகாப்பாக இருக்க முடியும்? "
"பிரித்து ஆளும் ஐரோப்பியர்களின் அட்டகாசக் கதை. விட்டுச் செல்லும் நிலத்தற்குத் தீவைத்துச் செல்லும் பரேதசிகளின் கதை."
"எளியவர்களின மரணத்தை, ஜெர்மனியின் கருமத்தை, கொடூரத்தின் நெருப்பில் சுட்டு சாம்பலான இனத்தை, உலகம் நின்று பார்த்துக்கொண்டிருந்தது."
"நினவிருக்கட்டும். வரலாற்றை மறந்தவர்கள் மறுபடியும் வரலாற்றின் மறுதலிப்பிற்கு பொறுப்பாவார்கள் என்பது நினவிருக்க ட்டும்..."
"இருப்பவர்கள், வென்றவர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுவதே வரலாறாகிறது..."
"தீவிரவாததைத ஒடுக்குவாம் என்று புறப்பட்டவர்கள் தீவிரவாதிகளாக மாறும் சாத்தியங்கள் உண்டு..."
"யூதர்களின மீது வன்மம் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். அதற்கு விலை கொடுத்தவர்கள் அரேபியர்கள் "
"நாஜிக்களின் மரண இயந்திரத்தை இயலாமையால் ஏற்றுக் கொண்ட யூதர்கள், இன்று ஆயுதங்களால் பலசாலிகள்"
"பாணடவர்கள் என்னத்தை வென்றார்கள், விதைவகள், அநாைதப்பிள்கள் நிறந்த நாடுதான் மிச்சம். தங்கள் சொந்த பந்தங்களை, பிள்ளைகளை, நண்பர்கள. இழந்து என்ன சுகம் கண்டார்கள்...?"
"பகிர்ந்த கொணடு வாழமுடியும், பறித்துக்கொண்டு வாழமுடியுமா?"
"வரலாற்று தவறுகுளைத் திருத்தப் புறப்பட்டால், புதிய தவறுகளை செய்வோம்"
"நம் மீது பகையை வளர்த்துக்கொண்டு பழிவாங்க காத்திருக்கிறார்கள். மக்களின் சுடு மூச்சை சுமந்து கொண்டு நம்மால் வாழமுடியுமா?"
"இன்றைக்கு என்னென்னமோ நடக்கும் போது இயலாமையில் பார்ப்பவர்களாக நாம் இருக்கக் கூடாதல்லவா.."
"நாளைகளின் நம்பிக்கையை யாராவது எனக்கு ஏற்படுத்தினால், நேற்றைய நூறு வலிகளையும் மறக்க நான் தயாராக இருக்கிறேன்"
மேலுள்ள இன்றைய இந்தியச் அரசியல் போக்கை ஒப்பிட்டு எழுதிய ஈர்த்த வரிகளில் சில. அரசியல் புரிதலையும் அதை அழகுற தமிழில் மொழியில். முதல் முறை படித்திருந்தாலும் இரண்டாவது முறை நல்ல புரிதலோடு வாசிப்பு அனுபவம்.
- ஒட்டடை பாலச்சந்திரன்
கருத்துகள்