அரு(று)கில்... சிங்கமுத்து அய்யனார்
சிங்கமுத்து அய்யனார் கோவில். உறவினர் எதிர்ப்போடு திருமணம் செய்து கொண்ட என் பெற்றோர்களுக்கு, அதன் வழி எங்களுக்கு வந்த இடத்தில் குலதெய்வமாகியது. சகோதர வகையில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் மொட்டை இங்கேதான் )
நாள்தோறும் நடை பயிறசி குளக்கரையில் தான். என் எழுத்துச் சிந்தனைக்கு ஆற்றுப்படுத்தும் அடப்பன்குளக் கரை.
புதிய கல் கட்டுமானத்தில் குடமுழுக்கு நடந்து 50 நாட்கள் கடந்திட்டது. தெய்வ நம்பிக்கையற்ற எனக்கு, அமைதியான குளக்கரை, கோவில், தாமரை நிறைந்த ஊரணி. வழிபடும் மக்களின் பூர்வகுடி மிச்ச சொச்சங்களும் பிடித்த ஒன்று. இப்போது திரைமறைவாக சிறுவர்கள் குளிக்கின்றனர். ஒருகாலத்தில் குடிநீர் ஊரணி, இப்போது மீன் வளர்ப்பில். ஏற்கனவே ஆக்கிரமிப்பில். உலகத்திலேயே கோனல் மானலான கரையை வடிவமைத்தவர்கள் கறைபடிந்த கைக்கு சொந்தக்காரர்கள். சூழலில் கல்வி பெறாத எளிய உழைப்பாளி மக்களின் பக்தி, எதிர்காலத்தில் தங்களின் வாரிசுகளுக்கு சவாலாக அமையும் என்பதை அறியாமலேயே பக்தி முக்த்தியில்...
பொதுவாக புனரமைப்புகள் பழையதை மறந்து, பொலிவை இழந்து, சில நேரங்களில் ஆன்மாவையேம் இழந்து விடுவதும், ஜனநாயக வழிபாட்டை மறுதலித்து, கட்டு செட்டான கரார் தன்மை அன்னிய படுத்தி விடும். இந்த கோயிலும் விதிவிலக்கல்ல.
கோவிலில் மீந்த கழிவுகள் குளத்தை அசுத்தமாக்குகிறது. எதிரில் இருக்கும் விளையாட்டு மைதானம் சிங்கமுத்து திடல் வாகன நிறுத்துமிடமாகி குழந்தைகளின் விளையாட்டை விரட்டுகிறது. வழக்கமான சாலையும் ஆக்கிரமிக்கப்பட்டு விளையாட்டு மைதானம் சாலை ஆகிறது.
கும்பல் மனோபாவ உளவியல் லாவகமாக சாலையை, குழந்தைகளின் விளையாட்டு மைதானத்தை, கழிவு கொட்டும் தொட்டியாக குளத்தை மாற்றி, நிர்வாகிகள் எளிய பக்தர்களை ஊடுருவி உத்து பார்க்கப்படுகிறது. போகப் போக பழகிவிடும் என்றாலும். அருகே தனியார் மருத்துவமனை முழு வீச்சில் கட்டுமானப்பணி நடைபெறுகிறது. எதிர்காலத்தில் அதன் வாகனங்கள் குழந்தைகளின் விளையாட்டு உற்சாகத்தை திருடிவிடும். முகூர்த்த நாட்களில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வாகனங்கள் ஆக்கிரமிப்பது இயல்பான ஒன்றாகிவிட்டது.
புதுப்பிப்புகள் அவசியம் என்ற போதும் கைவிலங்காகவே. புதிய நிகழ்ச்சி போக்குக்கு பக்தர்கள் தயாராகி விடுவார்கள். செல்லாத காசாக பழைவர்களின் உரையாடல்கள் சிதறி மக்கிபோகும்.
கோவில் வளாகத்தின் பழைய அணுக்கமான அன்பு மனிதர்கள் இல்லை. பிரம்மாண்டத்தில் செருக்கில் தங்களுக்கே தெரியாமல் தலையில் பிரம்மாண்ட உளவியலில் நிர்வாகிகள்.
பெருமிதமும், குல குறிப்பும் பட்டவர்த்தனமாய் நுட்ப குறிப்பால் புரிந்தது கொள்கிறேன்.
இப்போதெல்லாம் வழிபாடுகள் பிரமாண்ட செறுக்கின் மீது கடவுள் சிறிய கற்களால்...
கருத்துகள்