அலுக்காத சென்னை
கருத்தரங்கு
அடையார் 'சிங்கை60' கண்காட்சியும் - அதன் வழி சில அவதனிப்புகள்.
சமீப நாட்களில் என்னை சுற்றிய சாதியும் அதைப் பின்பற்றும் மனிதர்களின் உளவியல் பாங்கு, சொல்லாடல்கள், கலாச்சாரம் நடவடிக்கை, நுட்பமான அறம், சாதிய சாயம், உடல் அமைப்புகள், வீடுகளில் உணவுகளில் நுட்பம், ரசனைகள், சொலவடைகள் மற்றும் உடல் அமைப்பு போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்துகிறேன். அதை நீட்சியாக உயர் பொறுப்பில் இருக்கும் பெண்களின் நடவடிக்கை முடிவு திட்டமிடல் கலை நுகர்வு நுட்பம் என புத்திக் கொள்முதல் செய்கிறேன். ஆண்களைக் காட்டிலும் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்கள் தான் எந்த பொறுப்பில் தலைமைத்துவம் வைக்கிறோமோ அதற்கு உண்மையாக இருக்கிறார்கள். விரிந்த அறிவுடன் பொறுப்புணர்வுடன் நுட்பமான கலை உணர்வை வெளிப்படுத்துவது என தூள் கிளப்புகிறார்கள். நேற்றைய என்னுடைய நூல் அறிமுகம் செய்வதில், அணிந்துரை வழங்கியதில் அதற்கு முதல் நாள் சிங்கை 60 கலை கண்காட்சியில் வரவேற்றது பெண், சிங்கப்பூரில் உள்ள நான்கு பேர் தங்கள் கலை படைப்பை காட்சிப்படுத்தியிருந்தார்கள். அதில் இருவர் பெண். பொறுப்புணர்வுடன் ஆவணப்படுத்தி நேர்த்தியாக காட்சிப்படுத்திய ஒழுங்கு சிறப்பு. சிற்பங்களில் ஆண்களின் பாவனைகளும் பெண்களின் பாவனைகளும் வேறு வேறு ஆனவை என்கின்ற எனது யுகம் நேற்று உண்மைக்கு அணுக்கமாக இருப்பதை உணர்ந்தேன்.
ஆண்கள் மிருதுவான மேலோட்டமான கலைப்படைப்புகளுக்கும் அழுத்தமான ஆழமான கலைப்படைப்புக்கும் இடையே ஒரு சமரசம் செய்து கொள்கிறார்கள். பெண்கள் இதுவாகவும் அதுவாகவோ ஸ்துலமாக தங்கள் படைப்புகளை வெளிக்கொண்டு வருகிறார்கள். சில விதிவிலக்குகள் இருக்கலாம். பெண்கள் லஞ்சம் பெறும் பழக்கம் ஏற்பட்டு விட்டால் மாட்டிக் கொள்கிறார்கள். இப்படி எதை செய்கிறோமோ அதில் ஆழமாக வினையாற்றக் கூடியவர்கள்.
மருமகளும் - அவர்களின் அப்பாவும்
காந்தியும் - எழும்பூர் அருங்காட்சியகம். இந்த காந்தி சிலையாகவும் சிதிலமாகவோ ஓவியமாகவோ புகைப்படமாகவோ எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்கவே மாட்டேங்கிறாரே ! - எனக்கு மட்டும் தானா?
வரவேற்புரை "ஆத்தினோம்..."♨️
கருத்துகள்