இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டை 8 வது புத்தகத் திருவிழாவும் நானும்

படம்
புதுக்கோட்டை 8 வது புத்தகத் திருவிழா இந்த ஆண்டு தாமதமாக தொடங்கினாலும் சிறப்புடன் நிறைவுற்றது. கட்டமைப்பு வசதி சிறப்பாக இருந்தது. பகல் நேரங்களில் அனத்தியது. மற்றபடி மழைக்கு சிறப்பாகவே இருந்தது. மாலை நேர நிகழ்வில் வாழ்த்துரைகள் நேரத்தை தாண்டியதாக அமைய சிறப்புரைக்கு காத்திருப்பவர்கள் மெதுவாக காணாமல் போனார்கள். எதிர்காலத்தில் சரி செய்து கொள்ள வேண்டியவை. விழாக்காலம் என்பதால் விற்பனை குறைவு என்கின்ற முனுமுனுப்பை அவதனிக்க முடிந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தன்னார்வலர்களின் உழைப்பு மதிப்பிற்கு உரியது. திட்டமிடுதல் நிதி சேகரித்தல் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்தல் அரசு நிர்வாகத்தோடு இணைந்து இலக்கை எட்டியது வாழ்த்துகள். வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த முறை இல்லையோ?  என்னுடைய நூல்களும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  7ம் கவிதை தொகுப்புகள் வெளியிட்டில் பங்கேற்றேன் . அஜய்குமார் கோஷின் மழைச்சாரல் , சோலச்சியின் ஆப்பாயல ஒரு அடி, மை...

மற்றும் குழுவினர் - யாழிசை மணிவண்ணன்

படம்
மற்றும் குழுவினர்  யாழிசை மணிவண்ணன்  கவிஞரின் ஐந்தாவது தொகுப்பு.  வெளியீடு அலர் பதிப்பகம்  விலை 130  alar.publication@gmail.com  யாழிசை மணிவண்ணனின் கவிதைகள் எந்தத் தர்க்கங்களுக்குள்ளும் தலை காட்டாமல் எளியவற்றின் பக்கம் நின்று எம்பிக்குதிப்பவை. இத்தொகுப்பில் யாழிசை தன் மூன்றாவது பார்வையால் மொழியையும் கற்பனைகளையும் யதார்த்தங்களின் வீதியில் வடங்களாகப் பிணைக்கிறார். அவர் இழுக்கும் திசையெங்கும் கவிதைகள் சப்பரமாக உருமாறி இணங்கிச் செல்கின்றன. வழியெங்கும் தான் சந்தித்த மனிதர்களோடு சிலாகித்துப் பேசுகின்றன. புழங்கிய தருணங்களோடு சல்லாபம் கொண்டு இடையிடையே காமத்தின் மண்டகப்படிகளில் அருள் பாலிக்கின்றன. தேர் தொடங்கிய தேரடிக்கே வந்து நிலைகுத்துவதைப் போல முடிவை நோக்கி நகருவதே  இக்கவிதைகளின் பலம். சொல் சிக்கனம் நமது மொழியின் செறிவை சிறப்பையும் சொல்லக்கூடிய கவிதைகள். கற்பனையும், ஒப்பிடும் கனக்கச்சிதமான. வீணடிக்காத சொற்களின் பிரயோகங்கள். நூல் வடிவமைப்பு மிக நேர்த்தி. கவிதைகளை அடக்காமல் ஒரு பக்கத்தில் மூன்று வரி என கவிதை கனமாக பக்கம் முழுமையும் நிரப்பிக் கொள்கிறது. வார்த்த...