இடுகைகள்

ஜெ.ஜெ. கல்லூரி & தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - சிறுகதை பயிலரங்கம்

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஜேஜே கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி புதுக்கோட்டை தமிழ்த்துறை இணைந்து மாணவர்களுக்கு இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கு. 14.15 ஜூலை 2025 கல்லூரி வளாகத்தில் மூன்று ஆண்டுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் துவங்கியது. துணைத் தலைவர் ஐயா தயாநிதி மற்றும் எழுத்தாளர் முனைவர் துவாரகா சாமிநாதன் இருவரின் சீரிய முயற்சியில் இந்நிகழ்வு சாத்தியப்பட்டது. தமிழ் தறை சார்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர். கல்லூரி முதல்வர் அவர்களின் துவக்க உரையுடன் ஐந்து அமர்வுகள் சிறுகதை குறித்த அழகியல் இன அறிவியல் கூறுகள் என பல்வேறு பொருன்மைகளில் முனைவர் காமராசு துவங்கி வைத்து, கவிஞர் கண்மணி ராசா சிறுகதை பேசுபொருள் குறித்தும், அண்டனூர் சுரா அவர்களின் வட்டார எழுத்தாளர்களின் கதையாடலும் சிறுகதையின் பெண்கள் குறித்து முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் அழகிகளும் இன வரைவியிலும் என்கின்ற பொறுமை குறித்து கவிஞர் கலியமூர்த்தி அவர்களும் நுட்பமான உரையால் மாணவர்களை பேராசிரியர்களை ஈர்ப்புடன் ஒருங்கிணைத்தனர். நிறைவுறையாக மாநில பொதுச் செயலாளர் கல்லூரி நிர்வாக...

A.I. செயற்கை நுண்ணறிவு யுகம். அடே அப்பா...

படம்
செயற்கை நுண்ணறிவு வரமா! சாபமா? தொழில் நுட்பங்கள் யார் கையாளுகிறார்களோ அவர்களின் வசம். இன்று ஏகபோக முதலாளிகளின் கைகளில். சோசலிச அதிகாரத்தின் கீழ் மக்களுக்கான வாய்ப்பாக அமையும்.  ஏகபோகங்கள் மக்களை ஏமாற்றி இயற்கையை லாவகமாக சட்டங்கள் ராணுவம் நீதி பரிபாலனை இவைகளை தாண்டி செயற்கை நுண்ணறிவுகள் உலகை கட்டிப்பட போகிறது. திறனற்ற தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். ஊதிய உயர்வு அகங்காரங்கள் அடக்கி ஒடுக்கப்படும். அதே நேரம் பின்தங்கிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு  அளப்பரிய முன்னேற்றம் உலகை மேலும் மக்களிடையே இடைவெளியை ஏற்படுத்தும்.  குறிப்பாக மின்சார தயாரிப்பு போன்ற ஆற்றல் துறைகள் செம்மையாக்கப்படும். சுற்றுச்சூழல் சவால்கள் கண்காணிப்பில் கட்டுக்குள் வரும். ஆனால் தீர்க்க இயலாது. பல துறைகளில் இலவச செயற்கை நுண்ணறிவு வலைதளங்கள் அடே அப்பா ரகங்கள் ஆச்சரியத்திற்குள். இன்னும் மேம்படுத்தப்பட்ட கட்டண பதிப்புகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். வேலைவாய்ப்பை அழிக்கும்.  சமீபத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களை பேட்டி எடுப்பதற்காக தயாரானேன். அவரும் அவருடைய பழைய பேட்டிகளை மணிவிழா மல...

சாரத என்ற எஸ். நடராஜன்

படம்
தெலுங்கில் அழியாப் படைப்புகளைப் படைத்த தமிழன் சாரதா (எ) எஸ். நடராஜன்  1924ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த நடராஜன், சாரத என்ற புனைப்பெயரில் தெலுங்கில் அழியாப் படைப்புகளைப் படைத்த அற்புதமான படைப்பாளி. சுப்பிரமணிய ஐயருக்கு மகனாகப் பிறந்த நடராஜன் பிழைப்புக்காக சென்னை சென்று, அங்கும் வாழ வழி இல்லாமல் தனது அக்காவை திருமணம் செய்து கொடுத்த தெனாலிக்கு தனது 13ஆம் வயதில் அடியெடுத்து வைத்தார். வயிற்றுப் பிழைப்புக்காக ஹோட்டலில் சர்வராக வேலை செய்து சிறிது சிறிதாக முன்னேறி சமையல் மாஸ்டராகப் பணிபுரிந்தார். இந்த வேலைகளிடையே கிடைக்கும் நேரத்தை எல்லாம் தெலுங்கு புத்தகங்களை இடைவிடாமல் படித்து தெலுங்கு மொழி அறிவை வளர்த்துக் கொண்டார். அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு சமூகம் பற்றிய விசாலமான பார்வையை பெற்றுக் கொண்டார். 1946இல் கையெழுத்தாலான சிறு பத்திரிகையை ஆரம்பித்து தனது இலக்கியப் பயணத்தை தொடங்கிய நடராஜன் படிப்படியாக சிறுகதைகள், நாவல், நாடகம்,விமர்சனம் என்று தனது இலக்கிய எல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக விரித்து 1955இல் மரணம் அடையும் வரை இலக்கியப் பயணம் மேற்கொண்டார். இந்தப்...

வாழ்த்துக்கள் த.வெ.க. விஜய், ஆனால்...

படம்
தமிழக வெற்றிக் கழக முதல்வர் வேட்பாளர் விஜய்க்கு வாழ்த்துக்கள். திமுக பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. வெற்றி கழகத்தை தலைமையினை ஏற்று சில கட்சிகள் கூட்டணியில் சேரலாம் என்கின்றனர். ஆக அதிமுக வாக்கு வங்கியை மடை மாற்றம் செய்ய எத்தனிக்கிறது. பாஜக, நாம் தமிழர் இப்போது தமிழக வெற்றி கழகம் போட்டி போட்டு மடைமாற்றம் செய்ய தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது பிற கட்சிகளுக்கு எதிராக சமூக நீதி அரசியலை திமுக அரசியலாக முன்னிறுத்துவதால். கூட்டணிக் கட்சிகளும் பல நெருக்கடிகளுக்கு இடையே வேறு எங்கும் செல்ல முடியாமல் அதன் பின்னாலேயே நிற்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். திமுக எவ்வளவு மோசமாக ஆட்சி செய்தாலும் சமூக நீதி அரசியலை முன்னிறுத்துவதன் மூலம் அதற்கு அரசியல் லாபமே.  திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சமுக நீதி அரசியல் சொந்த வாக்கு வங்கியை சிதறடிக்க இயலாது என்பதால் எல்லோரும் திமுக மீது எதிர்ப்பு அரசியலை கட்டமைக்கின்றனர். இதில் வாக்குகள் சிதறப்போவது அதிமுகவுக்கே பாஜகவோடு கூட்டணி வைத்த எந்த கட்சியும் உருப்பட்டதாக வரலாறு இல்லை. அதை...

ஆவுடையார் கோவில் - பயணம்

படம்
சைவர்கள் பௌத்தர்களை கழுவேற்றல் தேர் சிரமைப்பு 27 நட்சத்திர பொறிப்பு  தியாகராஜர் மண்டபம்  ஆவுடையார் கோவில் அடங்களுக்கு பிறத்தி அதாவது தெற்கு நோக்கிய சிவன் கோவில்,  கொடிமரம், பலிபீடம் கிடையாது, தெற்கில் குளம்,  பரியை நரியாக்கிய மாணிக்கவாசகரா உருவாக்கப்பட்ட தளம். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். நுழைவாயிலில் புலையன் புலத்தியர் உள்ளிட்ட சிற்பங்களும் சிறப்பான வடிவமைப்பு. சரஸ்வதி நூலகம் உண்டு, திருவாடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட கோவில்.  ஆவுடையார் கோவில் என்பது 'ஆவுடை' என்கின்ற பதத்திலிருந்து உருவானது. ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் இணைந்து இருக்கும் நிலையே ஆவுடை. நமது மக்கள் கொச்சையாக "நக்கி ஆவடை" என்று பயன்படுத்தும் சொல்லிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம். சிவலிங்கத்தின் அடிப்படை இதுவென்றாலும் இன்று இந்தப் பெயர் கொச்சை என்பது போல் உணர்ந்து திருப்பெருந்துறை என வழக்கம்போல சமூகத்தின் மேல்தட்டு சாதிய...

நாடகப் பயிலரங்கு - பங்கேற்பு அனுபவம்

படம்
கடந்த வாரம் தான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில குழு வழிகாட்டுதலின் அடிப்படையில், புதுக்கோட்டையில் இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கத்தை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக கடந்திருந்தோம். இந்த வாரமே கோயமுத்தூர் மாவட்ட கமிட்டியின் ஒருங்கிணைப்பில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள (தியாகசீலர் சி எஸ் சுப்பிரமணியம் நினைவு அரங்கம்) மாநில கட்சி கல்விக் கூடத்தில் இரண்டு நாள் நாடாக பயிலரங்கு நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட கட்சி கல்வி கட்டிடம் எல்லா வசதிகளும் நிறைந்த கல்விக்கூடம் என்பதை நேரில் கண்டபோது பெருமிதத்தை உணர முடிந்தது.  இரண்டு நாள் பயிற்சி முகாம் முதன்மை ஆசிரியர் முனைவர் திலீப் குமார் ஒருங்கிணைப்பில் முதல் நாள் முற்பகல் நாள் உடற்பயிற்சியும், மதியம் 40 க்கும் அதிகமான பங்கேற்பாளர்களின் அறிமுகம், அவர்களிடையே இருக்கும் கூச்சங்களை போக்குதல், ஆண் பெண் சமத்துவத்தை உணரச் செய்தல் போன்ற சின்ன சின்ன உடற்பயிற்சிகள் நுட்பங்கள் மதிப்புமிக்க அழகு வாய்ந்தவை. கல்வி பள்ளிக்கூடத்துக்கு வெளியே தான் நிறைய கொட்டி கிடக்கிறது. உடற்பயிற்சிகள் அனைத்தும் நடிப்பதற்கான நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக அமைந்தி...

பாசிசத்தை வெற்றிகொண்டு 80 ஆம் ஆண்டு கருத்தரங்கு

படம்