இடுகைகள்

அன்பின் வழியது... நூல் அறிமுகம்

படம்
அன்பின் வழியது ... நாவல்  சசிகலா தளபதி விஜயராஜா  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு  288 பக்கம் ₹230  2025 முதல் பதிப்பு கொங்கு மண் சார்ந்த விவசாய குடும்பத்தின் வாழ்வியல், சடங்கு, சாதிய சிந்தனை, ஆணாதிக்கம் உறவுகளுக்குள்ளான மனத்தாங்கல், மூடநம்பிக்கைகள், தற்கொலை பங்கு, குடி கலாச்சார குறிப்பாக அரசு மருத்துவமனையில் சாமானியன் சந்திக்கும் இடர்பாடுகள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவாக நிலங்கள் மீதான பிடிப்பு, நகரமயத்தில் கரைந்த உறவினர்களின் பழைய விழுமியங்கள் மீதான நோக்கு நிலை, அன்றாடம் தமது வீடுகளில் நடைபெறும் துரோகம், கயமை, பழிவாங்கும் உணர்ச்சி அதே நேரத்தில் யாரோ ஒருவரின் அன்பு, அரவணைப்பு, வழிகாட்டுதல் என கதாபாத்திரங்களும் அதன் வழி உரையாடல்களும் சிறப்பு. எதிர் கதையாடலை குறைத்து நேர்மறையான கதாபாத்திரகளின் எழுத்தாளரின் சமூக பொறுப்பு நிறைந்த களம் மதிப்புமிக்க ஒன்று. ஆனந்தன் என்ற கதாபாத்திரத்தில் பொறுப்புணர்வு, நிதானம் தன் சார்ந்த உறவினர்களிடம் மேன்மையுரும் போக்கை முதன்மை கதையும் மாந்தராக தேர்வு அருமை. இப்படி பல்வேறு கதாபாத்திரங்கள் மிகைப்படுத்தாமல் சமூகத்தில் உலவு...

யாத்வஷேம் - நூல் அறிமுகம்

படம்
யாத்வஷேம் - நேமிசந்த்ரா  மூலம் கர்நாடக  தமிழில்: க. நல்லதம்பி  கர்நாடகம், மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகடாமி விருது பெற்ற புதினம். எதிர் வெளியீடு, ₹ 450 ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம் பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான் வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில், எங்கும் ஹிட்லரின் 'மை கேம்ப்' பளபளக்கும்? பிரதிகள் கிடைக்கின்றன. எங்கிருந்து மறுபடியும் இந்த உற்சாகம் ஏன் அவன் 'வெற்றி' ஆர்வத்தைத் தூண்டுகிறது. யாருக்கு இலட்சியமாகிறான்? ஹிட்லர் மறுபடியும் பாராட்டுக்குரியவனாகிறானா? கேள்வி என்னை வாட்டுகிறது. பயமுறுத்துகிறது 12 வருடங்களுக்கு முன்பு, கோரிப்பாளையத்து இந்த யூதர்களின் சமாதிகள், எனக்குள் ஒரு கதையப் பிறக்கவைத்தன. ஹிட்லரின் மண்ணிலிருந்து காந்தியின் மண்ணிற்கு வந்த குட்டி யூதச் சிறுமியின் கதை அது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் நான் பார்த்த யூதர்களின் உலகை நாவலில் திறந்துகாட் முயன்றேன். அன்று பற...

மணப்பாறை வழியாக- சௌமா இலக்கிய நிகழ்வுக்கு

படம்
 கொடும்பாளூர்... அரங்கத்தில் பெரிய காத்தாடி காற்று வருகிறது 🤏🏽 மணப்பாறை  சௌமா இலக்கிய விருதாளர்களுடன்

கவிதை

படம்

அலைகளில் நெளியும் நிழல்... சாத்தூரில் அறிமுகம்

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் தனுஷ்கோடி ராமசாமி நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த கவிதை குறித்த உரையாடல். கலை இலக்கிய பெருமன்ற பொதுச்செயலாளர் மரு. த.அறம் அவர்களின் சாத்தூர் மருத்துவமனை மூன்றாவது தளத்தில் அமைந்த தனுஷ்கோடி ராமசாமி நினைவு குளிர்மை அரங்கத்தில் இந்நிகழ்வு 10.8.25 காலை பத்தரை மணிக்கு தொடங்கி மாலை நாலு மணி வரை உணவு உபசரிப்போடு நடைபெற்றது. பாவலர் கணேசன் அவர்களின் பாடல் கூடவே தபேலா சிறப்பாக அமைந்திருந்தது. கவிஞர் செல்லா அவர்களின் "ஒரு கூடை பூக்களும் ஒரு துளி வாழ்வும்" முதல் அறிமுகமாக துவங்கி இரண்டாவது எனது நூலும், மூன்றாவதாக கவிஞர் நாகாவின் யாரிடத்திலும் புத்தன் இல்லை இறுதியாக கவிஞர் கணேசனின் பாமரனுக்கோர் பாட்டு புதையல் என்ற நான்கு நூல்களும் அறிமுகம் விமர்சனம் என நிகழ்ச்சிக்கு இடையே கைப்பேசியை துலாவிக் கொண்டிருக்கும் கூட்டமாக இல்லாமல் எல்லோரும் கவனம் குவித்த கட்டுக்குள் நேர மேலாண்மைக்குள் அமைந்த செறிவு மிக்க உரைகள். ஏற்புரை... படைப்பாளிகள் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒவ்வொரு நூலுக்கும் இரண்டு கோணங்களில் விமர்சன அணுகுமுறை அற்புதமான ஏற...

அலுக்காத சென்னை

படம்
கருத்தரங்கு  அடையார் 'சிங்கை60' கண்காட்சியும் - அதன் வழி சில அவதனிப்புகள். சமீப நாட்களில் என்னை சுற்றிய சாதியும் அதைப் பின்பற்றும் மனிதர்களின் உளவியல் பாங்கு, சொல்லாடல்கள், கலாச்சாரம் நடவடிக்கை, நுட்பமான அறம், சாதிய சாயம், உடல் அமைப்புகள், வீடுகளில் உணவுகளில் நுட்பம், ரசனைகள், சொலவடைகள் மற்றும் உடல் அமைப்பு போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்துகிறேன். அதை நீட்சியாக உயர் பொறுப்பில் இருக்கும் பெண்களின் நடவடிக்கை முடிவு திட்டமிடல் கலை நுகர்வு நுட்பம் என புத்திக் கொள்முதல் செய்கிறேன். ஆண்களைக் காட்டிலும் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்கள் தான் எந்த பொறுப்பில் தலைமைத்துவம் வைக்கிறோமோ அதற்கு உண்மையாக இருக்கிறார்கள். விரிந்த அறிவுடன் பொறுப்புணர்வுடன் நுட்பமான கலை உணர்வை வெளிப்படுத்துவது என தூள் கிளப்புகிறார்கள். நேற்றைய என்னுடைய நூல் அறிமுகம் செய்வதில், அணிந்துரை வழங்கியதில் அதற்கு முதல் நாள் சிங்கை 60 கலை கண்காட்சியில் வரவேற்றது பெண், சிங்கப்பூரில் உள்ள நான்கு பேர் தங்கள் கலை படைப்பை காட்சிப்படுத்தியிருந்தார்கள். அதில் இரு...

கருத்தரங்கு - உயர் கல்வி பெறுவதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் - தீர்வுகள்

படம்
இந்தியாவில் உயர்கல்வி  பெறுவதில் மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும் கருத்தரங்கம்.  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய முற்போக்குப் பேரவை இணைந்து வரும் 09.08.2025 சனி மாலை சென்னையில் இந்தியாவில் கல்வி மிக வேகமாக தனியார் மயமாகி வருகிறது. வணிக மயமாகி வருகிறது. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் தங்கள் கிளைகளை இந்தியாவில் திறக்கின்றன.  இதனால் ஏழை எளிய மாணவர்களுக்கு  கல்வி எட்டாக் கனியாகி வருகிறது.  பள்ளிக் கல்வி , உயர் கல்வியும் ,தொழிற் கல்வி அனைத்தும்  தனியார் மயமாகி வருகின்றன.  உயர் கல்வி பெறத் தகுதியுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்றிய- மாநில அரசுகள் போதிய உயர்கல்வி நிறுவனங்களை,தொழிற் கல்லூரிகளை அரசுத்துறைகளில் உருவாக் கவில்லை. இது அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கிடையே கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது.  பள்ளிப் படிப்பை பல துன்ப துயரங்களுக்கிடையே,  இன்னல்களிடையே படித்து முடிக்கும், பல லட்சம் ஏழை மாணவர்கள் ,உயர் கல்வியை எப்படி பெறுவது என ஏங்கித் தவிக்கின்றனர்.  மிக ...