டில்லி பயணம் - தேசிய அருங்காட்சியகம் அடட...

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக தேசிய செயற்குழு கூட்டம், குழு போட்டாவுடன் நிறைவுற்றது. சுர்ஜித் பவன் தலைநகரில் உள்ள சிபிஎம் அலுவலகம் ஆகும். சிறந்த கட்டுமானமும் உள்கட்டமைப்பும் கொண்டுள்ள நவீன அரங்கம். உணவு, குளிரூட்டப்பட்டறை கூட்ட அரங்கு என அனைத்தும் சிறப்பு. கடந்த கூட்டத்தில் சீதாராம்யெச்சூரி கடைசியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேர்ல்ட் பீஸ் கவுன்சிலிங் பதக்கம் பெற்று அடுத்த நாளே உடல் நலக் கோலாரால் ஒரு வாரத்தில் இறந்து போனோர். 
தேசிய அருங்காட்சியதற்கு சென்றேன். இந்தியா கேட்டிற்கு பக்கத்தில். 20 ரூபாய் நுழைவு கட்டணம். மூன்று தளங்களும் குளிரூட்டப்பட்ட அறை. ஒரு நேர்த்தியான அருங்காட்சியகம். முழுவதும் ராணுவ மையம். கைப்பையை பாதுகாக்க தனி இடம் இலவசமாக. நுழைந்த உடனேயே சிந்து சமவெளி நாகரிக அருங்காட்சியகம் பலதரப்பட்ட தரவுகள், ஆச்சரியங்கள், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று மூக்கு நுழைத்திருந்தன இன்றைய ஆட்சியாளர்கள். ஆவலுடன் பார்க்க சென்ற நடன மங்கையை காணவில்லை ஏமாற்றம். ஓவியங்கள், சிற்பங்கள், மாதிரி காட்சிகள், பாடம் பண்ணப்பட்ட உடல் எச்சம், கட்டிட அமைப்பு, வீடு அமைப்புகள், வீதி, குளியலறை, கழிவுநீர் கால்வாய், என சிறப்பு. வரலாற்றுகளை தெரிந்து கொள்வதற்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஓலிவடிவ கியூ ஆர் கோடுகள் அங்கங்கே. பக்கத்திலேய கண்டெடுக்கப்பட்ட இடம் ஆண்டு தகவலாக இருந்தன. 

இரும்பு கண்டுபிடிப்பதற்கு முன்னமே தாமிரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள், பொறிப்பு சித்திரங்கள் சின்ன சின்ன துண்டுகளாக, வளையல்கள், சுட்ட மண்பாண்டங்கள் அதனுடைய குவளைகள், சட்டிகள் அடே அப்பா அத்தனை. முக்கால் மணி நேரம் இதிலேயே கழிந்தது. ஒளிப்படம் எடுத்துக் கொள்ளலாம் (இந்திய அரசுக்கு நன்றி). பார்வையாளர்களை விட ஊழியர்கள் 10 மடங்கு அதிகம். சில மாணவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சில வெளி மாநிலத்தவர் அவ்வளவே. 

பழங்குடியினர்களுக்கு என தனி வளாகம், லத்தின அமெரிக்க நாடுகள் இணைந்து தனி அருங்காட்சியகத்தை அமைத்து இருக்கிறார்கள் அருமை. ஆசிய நாடு முழுவதுக்குமான ஒற்றுமையை உணர்த்துவனும் ஒரு முழு அரங்கம். முகலாயர்கள், காஸ்மீரி இவர்களுடைய ஆடைகளின் வகைகள். பௌத்த அடையாளங்களுக்காகவே இரண்டு மூன்று அரங்கங்கள் அத்தனை மாதிரிகள் இருக்கின்றன. இந்தியா முழுவதும் சேகரித்த ஓவியங்களுக்கு ஒரு அரங்கம், இசைக் கருவிகளுக்கு ஒரு அரங்கம் 'யாழ்' கம்பி கருவியும் இருக்கிறது. சுவர் ஓவியங்கள் ஆடைகள் சிலைகள் பெரும்பாலும் சிதிலமடைந்து நமது குடுமியான் மலை சித்திரங்கள் போல் இருக்கிறது. 

அதேபோல ஒரிசா ஆந்திர பிரதேசம் மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் குஜராத் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் சிற்பங்கள் வேலைப்பாடுகள் கொண்ட மர அமைப்புகள் என ஏராளம். வளாகம் முழுவதும் சிலைகளால் நிரம்பி கிடக்கிறது. 

எனக்கு மிகவும் பிடித்தது எல்லோரும் அஜந்தா ஓவியங்கள், குகைகள் குறித்த தனியரங்கமும், அதனுடைய விரிச்சுவல் வீடியோக்களும். தொடுத்திறையின் மூலம் பழைய ஓவியங்களாக அதன் மீது கோட்டோ ஓவியன்களாக நாமே புரிந்து கொள்ளும் விதத்தில் அணிகலன் ஆடை உணர்வு விலங்குகள் பறவை என தனித்தனியாக சிறப்பாக அமைத்திருந்தார்கள். தமிழகம் குறித்த அதிகமான குறிப்புகளை காண முடியவில்லை சரியாக சொல்ல வேண்டுமென்றால் திராவிடம் (கேரளம் ஆந்திரா மலையாளம் கர்னாடக) ஒரு நெருடலை ஏற்படுத்தினாலும் பெரிய  அமைப்பு இது. 

சில அரிதான விஷயங்கள் (நடனமங்கை) உட்பட சில பிரிக்ஸ் நிகழ்வுக்காக மாற்றி எடுத்து செல்லப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். கேட்டதுக்கு இந்தியில் ஏதோ சொன்னதால் எனக்கு புரியவில்லை. இந்தியா கேட்டிற்க்கு பக்கத்தில் இருப்பதால் வாய்ப்பு இருப்போர் ஒருமுறை சென்று வருக. (திங்கள் மட்டும் விடுமுறை) வேகமாக பார்க்க வேண்டும் என்றாலும் மூன்று மணி நேரம் ஆகும். ஏற்றார் போல் திட்டமிடுங்கள். உள்ளேயே சிற்றுண்டி விடுதி உள்ளது. சீக்கிரம் சென்று வருக இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் சில பொருட்களை மறைத்து விடுவார்கள். (புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் பலவற்றை நான் இப்போது காண முடியாது போல்)

கருத்துகள்

சோலச்சி இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பு சிறப்பு தோழர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உயிர்சுருட்டி - வாசிப்பனுபவம்

போர் எதிர்ப்பு - AIPSO