இடுகைகள்

ஒரு கூடை கவிதை

கூடை நிறைய கவிதையை அள்ளிக் கொண்டு தெருவில் நடக்கலானேன். கவிதை பூக்களின் வாசனை தெருவெங்கும் என்னை கொண்டா... கண் விழித்துப் பார்த்தால் யாருமற்ற தெருவில் வாசனையற்ற பூக்களை தாங்கி தனியே நின்றிருக்க யாரேனும் முகர்ந்து விட மாட்டார்களா என மெதுவாக நடக்கலானேன், தீண்டுவார் யாருமில்லை. வாசித்து வாசித்து எளிமைப்படுத்தப்பட்ட கவிதை பூக்கள் இப்போது வாடிவிட, குப்பையில் கொட்ட வேண்டியதாகிவிட்டது. தெய்வங்களுக்கு படைக்க எண்ணுகையில் விக்கிரகங்களின் வெப்பத்தால் பூக்கள் துவண்டுவிட... மனப்பிறழ்வு மனிதன் தன்னடக்கத்தை போல், புலம்பித் திரியும் கவிதை

ஒட்டடை

படம்

பழைய கவிதை கலையம்...

படம்
எனது பழைய வலைபூ... http://ottadai.blogspot.com/

நடைபாதை நாழிகை

பள்ளம் படுகுழியில்  மீந்துபோன மழைநீர்,  கண்ணாடியாக வானத்தை  ஒளிப்படம் எடுத்துக்கிறது.

யாசிக்கிறேன்

குறிப்புகளற்ற வெளியில்  வார்த்தை கொட்டி கிடக்கிறது.  ஒரு குறிப்பைக் கொண்டு  அதை அழகுற அடுக்கி புலங்காயிதம் அடைந்து  அயர்ந்து பின் விழித்த போது  அவை அர்த்தமற்றவையாக. பொழிவிழந்து மங்கிப்போன குறிப்பாய்  அங்குமிங்கும் அல்லாடி கொண்டிருந்தது. தாயின் மன சிதைவு குழந்தையாக   என் கவிதை கூடவே வாழ்ந்து வந்தது  அந்த தாயை போல்  கவிதையை தூக்கி சுமக்கிறேன்.  அடுத்தவரின் கவிதைகள் என்னை பார்த்து பரிதாபப்பட்டு  இந்த குழந்தை கொன்று விடலாம் என்ற ரீதியில் புலம்ப பரிதாபப்பட்டு கடந்து போகும் நீங்கள்  என் கவிதையையும் சகித்தருள வேண்டும்.

புதுசு

கிழட்டு பருவத்தில்  காதலை காதலித்து கொண்டு இருக்கும்  நான்  என்னைப் பிரிந்த அவளின்  கடைசி சந்திப்பின் இளமையை உரு போட்டு... அங்கே அவளின் மகளுக்கு திருமணமாம்  அவளுக்கு தெரிந்திருந்தது  தன் இளமையை நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவள் கணவன் எந்த பிறக்கையும் இல்லாமல் கடந்து போகிறான்.  ஒத்த சிரிப்பை உதிர்த்து விட்டு கடந்து விட்டாள் நான் இப்போதும் நைந்து நிராதரவாய் விடப்படுகிறேன். பிடிவாத காதல் ஏதோ ஒரு  மூலையில் வீழும் போது  பிதற்றல் காதலாகி பின்நாளில்  கந்தலாக நைந்நது தொங்கும்... காதல் குறித்தான பழைய  போர்வையை போர்த்திக் கொள்வதால்  இளமை திருடப்படுகிறது  போர்வையை விலக்கி  புதுத் தெம்பு பெறுங்கள்

தற்குறி

தனிமையின் அவலட்சணம் குறுக்கு சந்தின் வழியே   தனிமை ஒன்று தலைகுனிந்து நடந்து சென்றது தனது பாக்கெட்டில்  சரியான எண்ணிக்கையில் உணவுக்கான பணம் தன் பணங்கள் சரியான விகிதத்தில்  எண்ணி எண்ணி செலவு பயனை அடைகிறது ஒரு பிரம்மச்சாரியின் செலவு குறிப்பு  தன் சார்ந்தது பெரும்பகுதியாக இருக்கும் அந்தப் பணங்கள் பொது புத்திக்கு  செலவு செய்யப்படுவதே இல்லை.  ஏனெனில்  தற்குறி தனிமை பொதுபுத்தி நம்மை  பலிவாங்கி விட்டதாகவே கரு கொள்கிறது ஆனால்  பாருங்க உணவு கடையில்  சாம்பார் பாக்கெட் ஓசி வாங்கி விடும் தற்குறிகளின் சிக்கனம்  நாளடைவில் கரிமித்தனமாக மாறி  பிசினாரித்தனமாக மரணம் அடைகிறது ஒரு தற்கூறியின் இலக்கு  இலக்கற்ற பயணமாகவே இருக்கிறது தனிமையின் நண்பர்கள்  சுயநலம்  தற்குறி  கொஞ்சம் சூது என  நட்பை சுருக்கிக் கொள்ளுகிறது பாதிக்கப்படும் நிகழ்வு ஒன்றிற்கு  வார்த்தைகளையோ கண்ணீரையோ சிந்தும்  இந்த தனிமை ஒருபோதும் கையில் இருந்து எதையும் தந்து விடாது குப்பைகளை அடுக்கிக் கொண்டிருக்கும்  தற்குறி தனிமை குப்பை என்றே உணராத ப...