புத்தனின் அரிவாள் - கவிதைகள் - அறிமுகம்

புத்தனின் அரிவாள் - கவிதைகள் அ. நிலாதரன் - ஆசிரியர் முதல் பதிப்பு : டிசம்பர் -2024 கொம்பு பதிப்பக வெளியீடு - 2024 ₹100 - பக்கம் 64 நிலாதரனின் கவிதைகள், எரியும் குடிசைக்குள்ளிருந்து ஓடிவந்திருப்பவை; உழவுக்குப் போகாத ஏர்க்கலப்பையில் பூக்கும் பேய்க்காளன் போன்றவை. தம் துருவேறிய கதிர் அரிவாள்களை, மொழியில்வைத்துத் தீட்ட முயல்வதின் வழியே இவர் கவிதைகளை உருவாக்குகிறார். வரலாற்றின் ரத்தவாடை மிகுந்த தன் நிலத்தின் கடந்தகால நினைவுகளை மீட்டி, இந்த நூற்றாண்டுக்கான அரசியலை தன் கவிதைகளில் முன்வைக்கிறார். அதன் ஒரு பகுதியாகத்தான். உழைக்கும் மக்களின் கழனிப் பக்கமாக வரும் புத்தனின் கைகளில் அரிவாளைத் திணிக்கிறார். இந்த நூற்றாண்டு வாழ்க்கையின் ஒரு துண்டுக் காட்சியின் வழி. தமிழ்ச் செவ்விவியல் மரபையும் நிலாதரனின் இக்கவிதைகள் சித்திரமாக்கியுள்ளன. நம் திணைசார் வாழ்க்கை அதன் ஈரப்பதத்துடன் வரையப்பட்டுள்ளது. வேட்டைக்குத் தப்பிய புலியைப் போன்ற கொடுங்காமம். கவிதை வரிகளுக்கு இடையே பதுங்கித் திரிவது உயிர்த் தீயைச் சுட்டெரிக்கிறது. விடுதலை வேட்கையுள்ள வர்க்கத்தின் மூர்க்கம்கொண்ட மொழியும், கட்டுக்க...