அரு(று)கில்... சிங்கமுத்து அய்யனார்
அடப்பன்குளம் - கரையில் சிங்கமுத்து அய்யனார் கோவில். உறவினர் எதிர்ப்போடு திருமணம் செய்து கொண்ட என் பெற்றோர்களுக்கு, அதன் வழி எங்களுக்கு வந்த இடத்தில் குலதெய்வமாகியது. சகோதர வகையில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் மொட்டை இங்கேதான் ) நாள்தோறும் நடை பயிறசி குளக்கரையில் தான். என் எழுத்துச் சிந்தனைக்கு ஆற்றுப்படுத்தும் அடப்பன்குளக் கரை. புதிய கல் கட்டுமானத்தில் குடமுழுக்கு நடந்து 50 நாட்கள் கடந்திட்டது. தெய்வ நம்பிக்கையற்ற எனக்கு, அமைதியான குளக்கரை, கோவில், தாமரை நிறைந்த ஊரணி. வழிபடும் மக்களின் பூர்வகுடி மிச்ச சொச்சங்களும் பிடித்த ஒன்று. இப்போது திரைமறைவாக சிறுவர்கள் குளிக்கின்றனர். ஒருகாலத்தில் குடிநீர் ஊரணி, இப்போது மீன் வளர்ப்பில். ஏற்கனவே ஆக்கிரமிப்பில். உலகத்திலேயே கோனல் மானலான கரையை வடிவமைத்தவர்கள் கறைபடிந்த கைக்கு சொந்தக்காரர்கள். சூழலில் கல்வி பெறாத எளிய உழைப்பாளி மக்களின் பக்தி, எதிர்காலத்தில் தங்களின் வாரிசுகளுக்கு சவாலாக அமையும் என்பதை அறியாமலேயே பக்தி முக்த்தியில்... பொதுவாக புனரமை...