இடுகைகள்

திரை மறைவு லாபியே, உயர் பொறுப்பு

படம்
இந்திய பண்பாடு அவ்வளவு உயர்வானது ஒன்றும் இல்லை. வரலாறு நெடுகிலும் கயமை, துரோகம், பழிதீர்த்தல் போன்ற மோசடிகளையே உட்கிடக்கையாக கொண்டது . சமூக நீதிக்கு எதிரான படிநிலைப் பண்பாட்டை அரசியல் சாசன சட்டத்தின் மெதுவான வினையால் மாற்றங்கள் வரத் தொடங்க, இனி சுரண்டல்களை சமூக அநீதியை மூடி மறைக்க முடியாது முடியாது என்றபோது, தன்னை தக்க வைத்துக் கொள்ள பாசிசமாக பரிணமிக்கிறது. கடந்த காலத்தின் மருந்தாக இருந்த பண்பாட்டின் நல்விழிமியங்கள் இப்போது காட்சி பொருளாக, கடைப்பிடிக்க முடியாதவர்களால் போற்றி பாராட்டி விருது கொடுத்து தனிமைப்படுத்தும் தடித்தனமாக மாறி உள்ளது. குடும்பம் என்ற சிறிய அலகில் தொடங்கி சாதி, கோவில் நிர்வாகம், உள்ளூர் அதிகாரம், பெரு நிறுவனங்கள், கட்சி, அரசு பதவிகள், ஆளுங்கட்சி உயர்நிலை, இந்திய அரசாங்கத்தின் உயர் பொறுப்பு வரை திரை மறைவு லாபிக்களால் தான் உச்ச அதிகாரம் தீர்மானிக்கப்படுகிறது. திரை மறைவு பண்பாடு சாதிகளில் ஆழமாகவும், முற்போக்கு அமைப்புகள், அதிகாரம் அற்ற அடையாள நிறுவனங்களில் குறைவாக இருக்கிறது. ஒரு போட்டியில் சமமான வாய்ப்புகள் உள்ள இருவரில் கூடுதல் திரை மறைவு வாய்...

சமூக நீதி பாடகர் தோழர் லெனின் படத்திறப்பு... திருச்சி

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், மேடைதோறும் இடதுசாரி அரசியலையும் சமூக நீதி அரசியலையும் தொடர்ந்து பாடுபொருளாக கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய, அரசியல் தெளிவும் சமூக நீதி புரிதலும் குறிப்பாக இடதுசாரி அரசியலின் பால் ஈர்ப்பால் ஒரே ஆள், ஒரே பறை சமகால அரசியலை எளிய மக்களுக்கு சமூக நீதியை பாடுபொருளாக்கி ஈர்ப்பை ஏற்படுத்தும் புரட்சிகர குரலுக்கு சொந்தக்காரர் தோழர் லெனின் மறைவு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகராக பாடராக மேடை தோறும் அலங்கரித்த லெனின் இழப்பு சரி செய்ய சிறிது காலமாகலாம்.  தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் இறப்புக்கு செல்ல முடியாமல் படத்திறப்புக்கு சென்றேன். தோழர் இந்திரஜித் படைத்தை திறந்து புகழஞ்சலி செலுத்திட, அருகிலேயே குடியிருக்கும் கவிஞர் கலியமூர்த்தியின் புகழஞ்லியுரை சிறப்பு. பாரதி கலைக்குழுவின் இணைபாடராக இருக்கும் காந்தி கணேசன் அவர்களின் தொகுப்புரையோடு தோழர் லெனின் நினைவுகளை பலரும் பகிர்ந்து கொண்டனர். குடும்பத்தார்கள், நண்பர்கள், தோழர்கள் என கச்சிதமான நினைவரங்கம். உணவு ஏற்பட்டோடு விடை. தோழர் கவிஞர் கலியமூர்த்தி அவர்கள் தேநீர்...

படைப்பரங்கம் : த.க.இ.பெ., புதுகை மாநகரம்

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் புதுகை மாநகர கிளையின் படைப்பிறங்கும் புதுக்கோட்டை திலகர் திடலில் எழுத்தாளர் சி பாலையா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் மாநகர செயலாளர் கவிஞர் பெருமாள் பட்டி பூ அடைக்கலம் அவர்கள் வரவேற்புரையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பையும் சீரிய முறையில் செய்திட, கவிஞர் பெர்னாட்ஷா, கவிஞர் சிவக்குமார், கவிஞர் சின்ன கனகு, மாவட்ட பொருளாளர் கவிஞர் சோலச்சி, கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் கவிதை படைத்தனர். பாவலர் அழகு நிலவரம் சங்கப் பாடல்களும் அதை தழுவிய சினிமா பாடல்களும் ஒப்புமை ஒப்புமை காட்டினார், கவிஞர் அடைக்கலம் மெட்டுப் பாடல்களை பாடினர். ஜெயித்துக் காட்டுவோம் ஜெயக்குமார், சீனி சேதுராமன், ஏ ஒய்ஃப் ராஜேஷ் கண்ணா, ஆகியோர் பங்கு பெற்றனர் எழுத்தாளர் சி பாலையா மு சிவானந்தம் அவர்களின் புதிய நூலை அறிமுகம் செய்தார். மாநகரத் தலைவர் முட்டாம்பட்டி ராசு அவர்கள் நெறியாண்டி செய்தார். முன்னதாக மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகிய புதிய பொறுப்பாளர்கள் கதர் ஆடையில் கௌரவம் செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் எதிர்வரும் மாநில அளவிலான சிறுகதை பயிலரங்கு நடத்துவதற்கான திட்டம் மற்றும் மாந...

நமக்கு தேவை; போராட்டமா?, போரா?.

படம்
வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகளுக்கு போர் கூடாத ஒன்று. பொருளாதாரம், உள் நாட்டு நெருக்கடிகளை கொண்ட,  நாடுகள் தங்களுக்கிடையே பேசி தீர்க்கும் நம்பிக்கையான ராஜீய உறவை பேணவேண்டும்.  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் சிவில் சமுகத்தினை அரசியல் சாசன வழி பாராளுமன்ற ஜனநாயக ரீதியாக மக்களை வழி நடத்துகிறது. இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதையே செய்கிறது. பொருளாதார ஆதாயத்திற்காக சில குழுக்கள் அருகில் இருக்கும் நாடுகள் மீது பகையை வளர்த்து அதன் வழி சிறு குழுக்கள் தீவிரவாத நடவடிக்கை ஏற்படுத்தி இரு நாடுகளுக்கு இடையே பதட்டத்தை உருவாக்குகிறது. இது ஆயுத வியாபாரிகளுக்கு லாபம். சர்வதேச அளவில் யார் இதை செய்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று.  கல்வியில் பொருளாதாரத்தில் பண்பாட்டில் பின்தங்கி இருக்கிற நாடுகளின் சீக்கிரம் இது போன்ற தேச விரோத தீவிரவாத நடவடிக்கைகளில் சிலர் இறையாகி போகி அது குறுங்குழுவாக மெது மெதுவாக பாசிசமாக பரிணமித்து நாடுகளுக்கு இடையே பகை உணர்வை வளர்த்து விடுகிறது. எங்கோ தோன்றும் இந்த நிகழ்ச்சி ஊழல் மலிந்த நிர்வாக முறைமைகளால் நீண்ட நாளாக அனுமதித்ததின் விளைவால் சொந்த நாடுக...

போர் போர் அது நீண்ட அக்கப்போர்.

படம்
பயங்கரவாதத்தை துல்லிய தாக்குதல் மூலம் தீவிரவாதத்தை அதன் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தும் ராஜதந்திரத்திற்குள், வகுப்பு வாத வெறுப்பு வலிந்து திணிக்கப்பட்டு, சமூக முழுமைக்கும் பதட்டமான ஒரு பண்பாட்டை இந்த ராணுவ நடவடிக்கை உண்டு செய்துவிடும். ஊடகங்கள், அரசு, எதிர்க்கட்சி, நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்கள், வரியைப்பு செய்து பிரபலமாக உலா வரும் உயர் குடி சமூகம், போதாக்குறைக்கு செலிப்ரட்டிகள் என எல்லோரும் அரசுக்கு எதிராக கருத்து சொல்லாமல் ஆதரித்தே ஆக வேண்டிய நிர்பந்தம்.  போர் வரியை உயர்த்தும், உயிரிழப்பை ஏற்படுத்தும், உள்நாட்டு வளர்ச்சியில் முதலீடை குறைத்து குண்டுகளாக வெடித்து தள்ளும், உறுதியற்ற பொருளாதாரத்தால் உற்பத்தி குறையும், உணவு பற்றாக்குறை, பதட்டமான உள்ளூர் நெருக்கடிகளை உருவாக்கும், ஊரடங்கு, மின்தடை, போக்குவரத்து பாதிப்பு,  வேலை இழப்பு, கல்வி இழப்பு, தினந்தோறும் உயிரிழப்பு பட்டியல்கள் வந்து கொண்டே இருக்கும். சுற்றுலா போன்ற அந்நிய செலாவணி குறையும்.  போர் புலிவாலை பிடித்த கதை. வளரும் நாடு வேறொரு தந்திர உபாயத்துக்கு முயற்சிக்கலாம். பயங்கரவாதம் தீர்க்க வேண்டிய ஒன்று, பொ...

இந்திய கிராமம் - நூல் அறிமுகம்

படம்
#இந்திய_கிராமம் ஆசிரியர் (இந்தி மூலம்) :  இரவீந்திர தன்வந்த் ஹலிங்கலி மொழிபெயர்ப்பு : நாணற்காடன் முதல் பதிப்பு: பிப்ரவரி - 2025 வெளியீடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவை மாவட்டக்குழு பக்கம் 64 - ₹. 70/- சுதந்திரத்திற்கு முன் உள்ள இந்திய கிராமங்களில் குறுக்கு வெட்டு தோற்றத்தை, பொருளாதாரப் போக்கு சமூக கட்டுமானம், அதிகாரம், கடமை, உரிமை, வழிபாடு, கல்வி அரசியல் என எல்லாவற்றையும் இயங்கியல் வழியில் ஆய்வு செய்து சுருக்கமாக நமக்குத் தரும் சிறு நூல் இது. இந்தியா முழுமைக்கும் பொதுவான புரிதலில் புரிந்து கொள்ளக்கூடிய எளிய தமிழில் மொழிபெயர்ப்பாளர் நாணற்காடன் சிறப்பு பணியை செய்திருக்கிறார். நூலின் ஆசிரியர் ரவீந்திர தன்வந்த் ஹலிங்கலி கர்நாடகாவை சேர்ந்த முனைவர் அறிவியல் வகைப்பட்ட ஆய்வு முறையில் இந்திய கிராமங்களில் போக்கை அதன் பொருளாதார அடித்தளத்தை அதன் மீது கட்டப்பட்டுள்ளது சாதி மதம் அதன் மீது கட்டப்பட்ட அரசியலை வகைப்படுத்தி உள்ளார். குறிப்பாக சூத்திரர்களின் கடந்த கால போக்குகளையும் அதன் மீது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சாதுரியமாக தவிர்த்ததையும் ஆசிரியர் காட்சிப்படுத்துகிறார். அம்ப...

காரியக்கார கிறுக்குகளின் காலம்...

படம்
அமெரிக்காவின் அதிரடி அதிபர் வரி விதிப்புகளை மாத்தி மாத்தி அமைப்பது, தடாலடி அறிவிப்பை கொடுப்பது, பிறகு திரும்பப் பெறுவது என தொடர்ந்து கோமாளி போல நடந்து கொள்கிறார், என சர்வதேச ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை கேலிச்சித்திரங்களும் கிண்டலும் ஏகத்துக்கும் சமூக வலைதளங்களில் கொட்டி கிடக்கிறது. வர்த்தகப் போர் ஏற்படும் என்று முன்னணி பத்திரிகைகளும், தலையங்கம் எழுதி தள்ளுகிறது. பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் அதை உறுதி செய்வதாக எல்லோரும் நம்புகிறார்கள். பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அனைத்தும், அவர்களின் பொம்மலாட்டங்களே திட்டமிட்டு ஆட்டி வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை அதிகம் சரி செய்ய இன்றைய அமெரிக்க நிர்வாகம் முயல்கிறது. காரணம் மலிவான உழைப்பு கூலி, மூலப் பொருள்கள், வரிவிதம் குறைவு, சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் குறைவு போன்ற காரணிகளால் அமெரிக்க முதலாளிகள் பிற நாடுகளில் முதலீடு செய்வது அதிகரித்து இருக்கிறது. இதனால் வர்த்தக பற்றாக்குறையில் பெரிய இடைவெளி ஏற்படுகிறது. இது வலுவாக இருக்கும் டாலரின் மதிப்பு குறைவதற்கான ஏற்பாடு செய்கிறது. எனவேதான் ஆப்கானிஸ்தான் ஈர...