இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிடாரி

பல நேரம் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யும் பிடாரியாகவும்,   சில நேரம் எதற்கும் பயனற்ற தேவதையை வலம் வரும் பிடாரிகள் நமக்கு நெருக்கமானவரிடமே நம்மீது நேசம் கொள்கிறது தேவதைகள் யாரும் என்று தெருவில் காதல் அம்பு விடுகிறார்களா ? இல்லை அறுவமான உருவத்தை காதல் என்று தேவதை என்று கற்பனையில் காட்சிப்படுத்திக் கொள்கிறேன் விழித்துப் பார்த்தால் பிடாரி பாராட்டி சீராட்டி வளத்தது முதல் முதுமையின் மருத்துவமனை சிப்பந்தி வரை பிடாரிகளின் தயவு அதிகம் தேவதைகள் கவிதைக்கு உதவலாம் ஒருபோதும் எதார்த்த துணையாக வருவதே இல்லை இந்த உலகத்தின் சரி பாதி மானிடர்கள் ஏதோ ஒரு காலத்தில் தேவதைக்காக காத்திருப்பவர்கள் தான் சிலருக்கு மட்டும் பாக்கியம் கிடைத்திருக்கலாம்  பலருக்கு ...

இதயவடிவ பழுத்த இலை ஏன் உதிர்கிறது ?

சோர்வான எனது உணர்வில் பழுத்த இதய வடிவ இலை தாலாட்டாக என் மீது அமர்ந்தது... உற்சாகம் கரைபுரண்டோட கவனம் மாற்றப்பட்ட கவிதை என் மீது லேசாக வருடியது காற்றும் பல சருகுகளை உதிர்த்தது கற்பனை கதவு இடுக்கின் வழியே எட்டி பார்க்க,  வார்த்தைகளைத் தேடி கோர்த்து ஒரு பூமாலை கட்டி விட்டேன். வாசனையற்ற பூக்களால் தொடுத்திருந்தேன்.  யாரும் சீண்டி பாக்காத ஏக்கத்துடன் தொங்கிக்கொண்டிருந்தது கவிஞர் என்ற அகங்காரம் இல்லாததால் எல்லோரிடமும் காட்ட கூச்சப்பட்டு மறைதிருந்தேன். எனக்குப் பின் தோன்றிய சில அரைவேக்காடுகள் தங்களை அரங்கேற்றிக் கொண்டு அகங்காரத்தை கொண்டாடிக் கொண்டு.. நானோ யாரும் படிக்கவில்லை என அகங்காரத்தை கூட்டிக் கொண்டு இருந்தேன் ஒரு கவிதையின் பிறப்பு எனக்குள் அகங்காரத்தை வளர்ந்திருந்தது ஒரு கவிதை கருவை எல்லோரிடம் கொண்டு சேர்த்து இருக்க வேண்டும், ஆனால் எனக்குள் அகங்காரத்தை சூழ் கொள்ள செய்தது இதய வடிவ இலை சருகு எப்போதும் உதிர்ந்து கொண்டே இருக்கிறது. என் கழிவிரக்கம் கவிதை மனம் அலங்காரம் இட்டு அரியணையில் ஏற்ற நினைக்கிறது. யாரேனும் கைத்தட்டி விட்டுப் போங்கள் பிழைத்து போகிறேன்.  கவிதைகள் நஞ்சையும் ...

அருவம்

பழைய கவிதையின் நிழல் துக்கத்தில் இருந்த என்னை விழிக்கச் செய்து ஆவியாய் கருப்பொருள் இங்கு அங்கும் அலைய வார்த்தைகளின் அடுக்குகளில் லாவகம் மறைய அர்த்தம் மட்டும் பழைய பொருளுக்கு  விளக்கம் கேட்டது இங்குதான் ஒரு பியூட்டி அறிவாளிகள் குழம்ப ஒரு முட்டாள்தனம் எல்லோரையும் பார்த்து பல்லிலித்து பதிலளிக்க அறிவாளிகள் நம்ப மறுக்க தூக்கம் கலைந்தது பழைய கவிதை ஒன்று தூக்கத்தை கெடுக்கும் என்றால் என் விழிப்பு நிலை நம்ப மறுத்து ஏளனம் செய்கிறது இருந்து விட்டுப் போகட்டும் என்றால் அடுத்த நாள் பின்னிரவில் இதே தர்க்கம் எழுதப்படாத அசைபோடும் கவிதைகள் இப்படிதான் தூக்கம் முடியும் தறுவாயில் விடாப்பிடியாக எழுப்பி கேளி செய்கிறது யாருக்கு தெரியாத இதுபோல் சம்பவங்கள் கௌரவத்தை சிதைக்காமல் தற்குறி சால்சாப்பு போதிக்கும் பாவத்தின் வருமானம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பிச்சைக்காரனாக அலைகிறேன். ஆனால் கத்தையாக நோட்டுகள் பைகளில் விழிப்பு நிலையில் பின்னிரவு புலம்பல் அறுந்து போன காத்தாடியாக மறைந்துவிடும் எங்கோ முள் மீது சிக்குண்டு போது கவனத்தில் தட்டுப்படும்

கவிதை

பொறுப்பற்றவன் எதற்கு பொருத்தமற்றவன்  படிக்காத புத்தகங்களை அடுக்கியிக்கும் அலமாரி போல வார்த்தைகளை அடுக்கும் லாவக வார்த்தையே கவிதை பல நேரில் அடுக்கப்பட்ட வார்த்தைகளின் அடுக்குகளில் புலங்காயுதம் அடைகிறேன் சில நேரம் கழிவிறக்க கருத்துக்காக புழங்காயிதம் அடைகிறேன் யாரு மற்ற வீதியில் என்னின் கவிதையை கடைவிரிக்க எண்ணுகிறேன்.  ஆம்  கவிதை ஒரு தற்குறி சால்சாப்பு.

மணிக்கூண்டு

இயந்திரகத்தில் சீரான வேகத்தில் நகரும் இயந்திரம் மனிதர்கள் கடிகாரம் என பெயரிட்டார்கள் அது எப்போதும் ஒரே வேலை செய்கிறது  ஆனால்  இந்த மனிதர்கள் சில நேரம் பதட்டமடைகிறார்கள்,  சில நேரம் நகர்ந்து விடாதா என எண்ணுகிறார்கள் வட்டியும் வாடகைக்கு மொத்த உழைப்பை அர்ப்பணிப்பு செய்கிறது கடிகாரம் ஆழ்ந்த அழகிய உறக்கத்தை அதிர்ச்சியடைய செய்கிறது இந்த அலாரம். மனித உழைப்புகள் இயல்பை தொந்தரவு செய்பவையாகவே...  வேகமாக நகரும் நொடி முள்ளுக்கு மதிப்பில்லை மெதுவாக நகரும் மணிக்கு மதிப்பு  வரிசையில் காத்திருக்கும் வேகமாகவும்  பின்னாடி நிற்பவருக்கு மெதுவாகவும் நகர்கிறது   மாய பிம்பம் எப்படி இருவருக்கும் வேறு வேறாக இருந்தது?

ஓடுகாலி பறவையின் நிதானம்...

பறவைகளின் அதிகாரம் அதன் சிறகுகள் தான்... சிறகுகள் சிதைந்த பறவையின் நிலையை ஓடுகாளி மானிடம் பெயர் சூட்டியது... அதிகாரத்தை இழந்ததன் விளைவு தினமும் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை... சக மாற்று உயிரினங்கள் எப்போதும் என்னை குறிவைத்து தாக்க தயாராகிறது.  பயமே எனது 90% வாழ்க்கையாய்... எனது அனுபவங்கள் ஏதேனும் ஒரு பறவைக்கு கடைத்திருப்பேன் ஆனால், இனம் நெருக்கடி தருணத்தில் தன்னை தகவமைக்கும் மரபாய் மாறி இருக்கும் வாய்ப்பு கிட்டிடவில்லை.  உதிர்ந்த பிறகு வளர்ந்து விடும் என நினைத்த இறகுகள் குறை பிரசவத்தால் ஓடுகாளி பறவையானே வானத்தைப் பார்க்கும் நான் பூமியை பார்க்க முடியவில்லை சகோ கூட்டாளிகளான எந்த பறவையும் என்னை ஏளனம் செய்யவோ, இறக்கப்படவோ இல்லை.  நான் யாருக்கும் உணவாகினாலும் அவர்களுக்கு பசியை போக்கிவிட முடியாது இருந்த போதும் கைவிடப்பட்டு கிழட்டு விலங்கினங்கள் என்னை சீண்டி தான் பார்க்கிறது. பைத்தியக்காரன் இரவுகள் போலவே நானும் கடக்கிறேன். என்னால் உறுதியாக சொல்லிவிட முடியும் உலகில் பேய் பிசாசு எதுவும் இல்லை என்று ஏனெனில் என் இரவு விழித்திருப்பதிலேயே தூங்குகிறது.

நிதானத்தின் பொருட்டு

பரபரப்பாக எல்லோரும் பணிக்கு சென்ற பிறகு  யாரும்மற்ற வேலையில் பொழுதைப் போக்க தெரியாத ஒரு தற்குறி கலைஞனின் பகல் நேர கனவு யாருமற்ற டீக்கடை பெஞ்சில் முடிவுறலாம் பெஞ்சில் சிந்திய டி யில் ஒரு அழகிய கவிதையை கற்பனையோடு வரைந்து கொண்டிருந்தேன் கவிதை ஒன்று கூட பிறந்து விட்டது அதற்குள்ளாக ஒரு குடும்பஸ்தனி அழுக்குத் துணி அதை அழித்தது.  சாலைகளின் வாகன இரைச்சல்கள் வெட்டி பொழுதை அழகான இசையால் வடிவமைக்கிறது பொறுப்பற்றவன் புலம்பல் ஒரு பிடி சோற்றில் முடிவடையலாம் வெட்டிப் பொழுதுகள் வரட்டுதனங்களால் இலைகளற்ற ஆலமரமாக விருச்சம் அடைகிறது. ஏனோ அதீத கற்பனை கனவுகள் எதார்த்தத்தை நினைக்க மறந்து விடுகிறது. இவன் கண்ணின் கண்ணாடி முதிர் கனிகளை கூட குமரிகளாக வடிவமைக்கிறது. குறிக்கோளற்ற குறிப்புகளின் ஏடு பெற்றுத்தாள்களை சலசலக்கிறது. கண்ணாடி முன் நின்று துல்லியமாக எண்ணி விட முடிகிறது வெள்ளை முடிகளை கணக்கில் புலி  கனவுகளில் எலி இயல்பில் கிலி

நிதானம்

கவலையின் மீது குவிக்கப்பட்டும் ஒரு முகமே நிதானம் என் முன்னோர்களின் ஆசைகளை ஒரு கூடை நிறைய என் மூளை சுமக்கிறது தீர்க்கமுடியாத தீர்ப்புகள் அதில் ஏராளம் வரிசை கட்டி நிற்கிறது என் மொத்த ஆயுசும் போதாது அவைகளை இறக்கி வைப்பதற்கு ஓசியில் கற்சிலைகளை நோக்கி யாசிக்கிறேன்.  என் முன்னோர்களின் சாபம் போலவே எனக்கும் தொடர்கிறது தந்திரத்தால் மந்திரம் செய்து சொற்ப உழைப்பையும் சூறையாடும் சூனிய மந்திரக்காரன் மந்திர சூனியக்காரர்கள் பெருகி அவர்கள் மூளை முழுவதும் அகோரமாய் அந்நியனின் பாக்கெட்டை கொள்ளையடிக்கிறார்கள் எந்த இபிகோ வும் தண்டனை வழங்காது நமுட்டு சிரிப்புடன் நக்கரிக்கிறது. எங்கிருந்தோ அழகான இறக்கை உடைய பெயர் தெரியாத பறவை ஒரு பாடல் பாடி அமர்கிறது இப்போது என் மூளை சுமைகள் எனக்கு தெரியவில்லை

நாழிகை

கடந்து போய் விட்டு திரும்பிப் பார்த்தால் இருப்பதில்லை என் கருப்பு முடிகள் வெள்ளையாகிறது  ஆனால்  வெள்ளை முடிகள் கருப்பு அடிக்கத்தான் முடியும் விறுவிறுப்பான இந்த சருமங்கள் இப்போது சுருக்கமாக  என் செலவுகளை போல்  அதுவும் சுருங்கி போய்விட்டது எல்லோரும் கை குலுக்கிவிட்டு திரும்பிப் பார்க்கையில்  பலரும் என்னை விட்டு நெடுந் தூரத்தில் மறைந்து இருந்தார்கள் இளமை நாழிகைகள் எதிர்பார்ப்பற்ற அன்பால் நிரம்பி வழிந்தது ஆனால்  முதுமை நாழிகைகள் எதிர்பார்ப்போடு தன்னை புதைத்து கொள்கிறது

வரிசை

பலரின் இளமை துடிப்பை மனித வளத்தை கட்டி போடும் காலன். ஒருவர் இயங்க வரிசை காத்திருக்கிறது குறுக்கு வழியில் நமக்கு சிரிப்புடன் ஒருவர் அத்துமீறுகிறார் அவர் வெற்றியடைந்தவராக இப்போது வரிசை ஏமாளியாக  இங்கு அத்துமீறலே யோகம். பெரும்பாலும் அத்துமீறல்கள் சகித்துக் கொள்ளப்படுகிறது. எப்போதாவது கோபம் கொள்கிறது  பிறகு சமாதானம் அடைகிறது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் சபிக்கிறார்கள்  வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் சந்தோசமாய் லாவகமான அத்துமிரல் வரம். ஏனெனில்  இலக்கணங்கள் புத்தகத்தில் மட்டும் பரீட்சைக்கு உதவலாம்  ஆனால்,.

பின்னிரவு முழிப்பு

நீண்ட கவிதை என்பது உணவை உட்கொள்ளும் லாவகத்தை ஒத்ததே... கையால் ஊட்ட  அசைபோட  விழுங்க இடைவெளி இயந்திரதனத்தின் ஊடே கவிதை கரு பரிணமிக்கும பின்னிரவு விழிப்புகள் வழிபோக்கனின் அதிர்ஷ்டத்தை போல் கொட்டிக்கிடக்கும் வார்தைகள் அழகுற அடுக்கி இறுமாப்பு சூடாலாம். விடிந்ததும் என்னைப் போல் ஒருவனால் ஏளனமாக கடந்தும் போகலாம். ஆனாலும் விலைபோகாத உழைப்பு பலநேரங்களில் கழிவிரக்க ஆறுதலே... முயற்சிக்கும் போது முடியாமல் போக  ஏதோ ஒரு பின்னிரவில்  கவிதைகள் பேயாய் இறங்கிவிடுகிறது. வேறு வேறாக தோன்றினும் ஒரே மாதிரியாக... இடத்திற்கு ஊட்டப்படும் வாய்க்கரிசி போல் கவிதைகள் படிக்கப்படாமலே மரணித்து விடுகிறது.

தேவதையின் ஒப்பனை

அறிவு தூரிகை கொண்டு நிதானத்தை சொரிந்தேன் சுகமாகவே இருக்கிறது.  வேறொருவர் பாராட்டி சொரியும் போது இன்னும் சுகமாக நம்மை அடுத்தவர் பாராட்டி சொறிவது இருக்கே ? பேதமையின் போதை. அறிவு இடுக்கின் வழியே இருட்டை திருடும் ஒளியும் ஒலி தனிமனித இறுக்கத்தை தளர்த்தும் அகங்காரம் அறிவு அனாமதேய கனவின் மீது எழுத்துக்களின் சுவிகரிப்பு கவிதை கவிதை வார்த்தைகளில் சில கூட்டு புள்ளிகள் பொருந்தாது ஆனால் அழகியல் ததும்பும் கவிதை வாழ்க்கை கணக்கோடு ஒத்துப் போவதே இல்லை வித்தைக்காரனை கண்டு ஏமாறுவதை போல்... செல்லாத நோட்டுகளை ஏமார்ந்து வாங்காத எளிய மக்கள் கடந்து போகிறார்கள் சில அறிவு செறுக்காளர்கள் ஏமாறுவது போல் நடிப்போம். சுண்டலும் ஆறிப்போன தடித்த தேனீர், வாயைக் கெடுத்து விடைபெற்றது. சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள் பெற்ற விமர்சகரின் இலக்கணப்பிழை அங்கலாய்ப்பை  ஒப்பீட்டு நகைக்கிறேன். கவிதைகள் என்று சொல்லப்படுபவைகளில் பொருள் பொதிந்த வார்த்தைகள் பினமாக அணிவகுப்பு என்ன கொடுமை சரவணனா ? வார்த்தைகளை உயிர்புடனே அடுக்கினேன். ஆனால் பினங்களாகவே வாசிக்கிறோம்.  ஆம் தேவதைகளின் நாக்கு நமக்கு தெரிவதில்லை.

தேவதைகளின் நாக்கு

அறிவு தூரிகை கொண்டு நிதானத்தை சொரிந்தேன் சுகமாகவே இருக்கிறது.  வேறொருவர் பாராட்டி சொரியும் போது இன்னும் சுகமாக நம்மை அடுத்தவர் பாராட்டி சொறிவது இருக்கே ? பேதமையின் போதை. அறிவு இடுக்கின் வழியே இருட்டை திருடும் ஒளியும் ஒலி தனிமனித இறுக்கத்தை தளர்த்தும் அகங்காரம் அறிவு அனாமதேய கனவின் மீது எழுத்துக்களின் சுவிகரிப்பு கவிதை கவிதை வார்த்தைகளில் சில கூட்டு புள்ளிகள் பொருந்தாது ஆனால் அழகியல் ததும்பும் கவிதை வாழ்க்கை கணக்கோடு ஒத்துப் போவதே இல்லை வித்தைக்காரனை கண்டு ஏமாறுவதை போல்... செல்லாத நோட்டுகளை ஏமார்ந்து வாங்காத எளிய மக்கள் கடந்து போகிறார்கள் சில அறிவு செறுக்காளர்கள் ஏமாறுவது போல் நடிப்போம். சுண்டலும் ஆறிப்போன தடித்த தேனீர், வாயைக் கெடுத்து விடைபெற்றது. சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள் பெற்ற விமர்சகரின் இலக்கணப்பிழை அங்கலாய்ப்பை  ஒப்பீட்டு நகைக்கிறேன். கவிதைகள் என்று சொல்லப்படுபவைகளில் பொருள் பொதிந்த வார்த்தைகள் பினமாக அணிவகுப்பு என்ன கொடுமை சரவணனா ? வார்த்தைகளை உயிர்புடனே அடுக்கினேன். ஆனால் பினங்களாகவே வாசிக்கிறோம்.  ஆம் தேவதைகளின் நாக்கு நமக்கு தெரிவதில்லை.

முதுமையின் மீது மழை

முதுமையின் மீது மழை பெய்து கொண்டிருந்தது. உழைப்பை திருடி இளமை குடைபிடித்து நடந்தது. மழைக்காக ஒதுங்கிய காத்திருப்பு, சொற்களை அடுக்கி கவிதையாக்கி கொண்டிருந்தது. மழை நேரத்தில் யாரும் சோகத்தை யாசிக்கவில்லை. எல்லோர் மீதும் மழை சிலிர்ப்பை ஆரத்தழுவி சென்றது. ஒன்டிப்புலி தனிமை ஒரு பறவையின் குரலை, இசையை தொகுத்து தனக்குள் புளங்காகிதம் அடைகிறது. மலை நேரத்து சாலையில் அனைவரும் வாகன ஒலிகளுக்கு ஒருங்கிணைந்து கடந்து போகும்போது  ஒரு பறவையின் குரல் வெறுமையை, இசையால் வடிவமைக்கிறது. கற்பனைகள் பலநேரம் தன்னை காமக் கொடூரனாக, ரத்தத்தை சிதரடிப்பவனாக, வெகுளி என வடிவமைக்கிறது. 

இரண்டு மதுக் கோப்பைகள்

சமமாக பிரிக்கப்படும் மது மனிதனால் தோல்வியில் முடிகிறது எதுவும் தெரியாதது போல் கொள்கைகள் அமைதியாய் மனிதன் தனது தவறை திருத்தும் பொருட்டு குளிர்ந்த நீரை விலாவினான்  தன்னிலை தளர்வுற்று நான்கு கண்கள் கோப்பைகளில் அளவுகளை மிகத்துல்லியமாக கவனிக்கிறது.  மது கலவையை நிர்வகிக்கும் மனிதன் கவனத்துடன் பங்கு பிரித்து வெற்றி அடைகிறார். நான்கு கண்களும் சமாதானத்துடன் பூரிப்படைகிறது கூச்சல் குழப்பங்கள் நிறைந்த மது விடுதிகளில் இந்த நிகழ்வின் போது மட்டும் சுற்றுப்புறத்தில் யாருமே தென்படுவதில்லை ஏன் ? சமமாகப் பிரித்து வெற்றியாக பலருக்கும் உப பொருட்களை வாரி வழங்குகிறார்கள். அவர்களால் கூடுதலாக பல போத்தல்கள் வாங்க இயலும். ஆனால் ஒவ்வொரு முறையும் சமமாக பிரித்துக் கொள்ளும் துல்லியம் வெற்றியடையும் போது. மிக உன்னத மே.. ஆனந்தம்  கோப்பைக்குள் சோசலிசமாக வெற்றியடைகிறது. 

தவறவிட்ட கவிதை

தனிமையில் மிதக்கும் தக்கையாக கவிதையின் கரு... யாரேனும் பார்த்து விடக்கூடாது என்ற பதட்டத்தில், பேனா தவறுகிறது. வெற்றுத் தாள்கள் கருப்பு மையின் ஒரு புள்ளிக்காக சலசலத்து போராடுகிறது. தக்கையின் மீது தடுமாறி அலைக்கழியும் கவனம் எனும் எறும்பு ஏறிவிட, கவிதை கரு எனும் கௌரவப் பேனா கை நழுவிப் போகிறது. மனிதாபிமான துடுப்பை தேடுகிறேன். மூடுபனி விலக பார்த்தேன், என்னைப்போல் பலரும் மனிதாபிமானத்துடன் பேனா கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பர்களே கவிதைக்கு பேனா, மனிதாபிமானத்திற்கு துடுப்பு என்றேன். போடா துக்கடா என்று கடந்து போனார்கள்.  மொழியின் எழுத்து லாவகம் கவிதையாக அகங்காரம் கொள்கிறது. மனிதாபிமான துடுப்பு கழிவிரக்கத்தை அலங்கோலமாக தன்னை ஜோடித்து கொள்கிறது.  என்னின் மனிதாபிமானம், கவிதையை சுரண்டி தின்கிறது. இது எனக்கு மட்டும்தானா ?

குட்டி தூக்கத்திற்கு இடையில்...

ஒரு நெடும் தூக்கம் குட்டி உறக்கத்திற்கான கனவை கண்டது. நெடும் தூக்கம் இளமையின் லாவகம் பழுத்த ஒருவனின் தூக்கத்தை, குட்டித் தூக்கங்கள் திருடி கொண்டன. குட்டித் தூக்கங்கள் எப்போதும் தனக்குள் ஒரு கதையை பின்னிப்பிணைந்து கொள்கிறது.  குட்டித் தூக்கங்கள் சிறந்த கதை சொல்லிகள், திகில் கதை முதல் கழிவிரக்க கதை வரை காணக் கிடைக்கும். கண் திறந்தால் மறைந்து போகும். ஆனால் பழிவாங்குதலே கனவுகளின் அறக்கோட்பாடு.   அநேக குட்டித்தூக்கம் மனிதர்களின் அன்றாட நிகழ்வின் அவஸ்தை கோட்பாடாய். இப்படித்தான் ஒரு குட்டித் தூக்கத்தின் இடையில்... யாருமற்ற வீதியில் நடந்து போக, கண்விழித்தால் ஜன நெருக்கடி மிகுந்த சந்தை... ஒரு சந்தேகம் ? மாபெரும் கூட்டத்துக்குள் என் கனவு மட்டும் என்னை தனியாக கடத்துவது ஏன் ? புரிந்த புதிர்தான், புரியாதது போல் நகர்ந்து விடுகிறேன். கடவுளின் இருப்பை போலவே அறிந்து கொள்ளாமலே பயந்துகொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறேன். ஆனால் ஒரு போதும் ரத்த வாடையும், நெடியும் அங்கு இருப்பதே இல்லை ? கனவுகளுக்கு பிறகு விழித்தால் வியர்வையும் படபடப்பும் ?

நடுப்பக்க கவிதை

முழுமை பெறாத  நடுப்பக்க கவிதை,  சுண்டல் காரனின் மிக லாவகமாக...   கவிதை தாளை அதிகமாகவும் சுண்டலை குறைவாகவும் கட்டும் ராஜதந்திரி  சுரண்டலை புரிந்துகொண்டு,  சமாதானம் அடைந்து,  சுண்டி இழுத்த சுண்டலின் மனம்...  அவதானிக்கப்பட்ட ஊழலையும் பொருட்படுத்தாது வாங்கினேன்.  ஒரே ஆறுதல் ஈரம் படிந்த ஒரு கசங்கிய காகிதத்தில் யாரும் படித்து விடாத  கவிதை தென்பட்டது. நான் எழுத தவறிவிட்ட பொறாமை கொண்ட கவிதை.. அலமாரியில் நேர்த்தியாய் அடுக்கப்பட்ட வார்த்தைகள்... பொருள் விளங்கா உருண்டை போல் அதன் சுவையும் இருந்தது. வாழ்க்கை அனுபவம் அர்த்தங்களாய்...  சற்று நேரத்தில் கானல் நீராய் கரைந்துவிடும் தானே? வெண்சுருட்டு ஓட்டை வழியே அதன் அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருந்தேன்.  மூத்திர சந்தின் வாடை மட்டும் தூக்கலாக... ஒரு சாம்பிராணி பாயின் கடந்து போகும் வாடையை கவிதையாக கோர்த்து அழகு பார்த்தேன்.   ஆனந்தமான வெயிலில் காயும் மரத்திற்கு அடியில்,  சலவை செய்யும் மூதாட்டியின் கல்லாவில் நிறைய நோட்டுகள்...  சாப்பிட மறந்து பசியில் துணிகளைத் தேய்த்தாள், நானோ வெறும் கை...

சாத்தானே உண்மையின் கடவுளாக

சோப்பில் குளிக்காத விலங்குகளுக்கு ரோமங்கள் நேர்த்தியாக. நானோ நாளுக்கு இரண்டு முறை நீராட.  ஆனாலும் பிசுபிசுப்பு இயல்பு மீறிய தனித்திறன்கள் அகங்காரமாக பரிணமிக்க, லேசான பவுடர் பூச்சு  இயல்புக்கு மீறி துருத்தலாய்... தேவதைகள் சாத்தான் வேசம் கொண்டதால், சாத்தான் அரிதாரத்திலே இறப்பு எய்துகிரோம். ஒப்பனை உண்மையை மறைக்காது,  ஒளிந்து கொள்ளும். ஒரு நாள் ஒப்பனை,  பண்பாட்டு ஒவ்வாமையால் சிதையும்.  நம்மை வருடும் ஆறுதல் சூனியக்காரியின் விரல்களே.. சூனியக்காரியின் கைப்பக்குவம் நம்மை தாலாட்டி சீராட்டி வளர்க்கும். இப்போது இயல்பான மனிதர்கள் சாத்தான் வேசஷங்களில்...  துர்பாக்கிய கடவுள்களுக்கு முன்னாள்...  சாத்தான்கள் மனிதனாக வேண்டி முடி காணிக்கையை பிச்சையிட்டார்கள். கடவுள் வேண்டுதலுக்காக சாத்தான்களை பார்த்து அலங்கரித்துக் கொள்கிறது. சாத்தான்கள் தங்களை பெயர் மாற்றிக் கொண்டு மனித வடிவில்... ஏனெனில் சன்னதிக்குள் பிரவேசிக்கும் மனிதன், வெளியேறும்போது சாத்தானாக பரிணமிக்கின்றது.